தண்ணீர் தொட்டியில் ஏறி தற்கொலை மிரட்டல்!
பாண்டிச்சேரி:
கடன் தொல்லையால் சிக்கித் தவித்த நகைக் கடை உரிமையாளர் தண்ணீர்த் தொட்டி மீது ஏறி நின்று தற்கொலைசெய்து கொள்ளப் போவதாக மிரட்டியதால் புதுவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பாண்டிச்சேரி அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பராயன் என்பவரின் மகன் இளையராஜா. இவர் நகைக்கடை வைத்திருந்தார். கடையில் சரியான வியாபாரம் இல்லாத்தால் பெரும் நஷ்டத்திற்கு ஆளானார்.இதனால்கடையை மூடி விட்டார்.
ஆனால், இளையராஜாவுக்கு கடன் கொடுத்தவர்கள் அதைக் கேட்டு நெருக்க ஆரம்பித்தனர். இதனால் தனதுதந்தையிடம் ரூ. 50,000 பணம் கேட்டுள்ளார்.
ஆனால் அவர் கொடுக்க மறுத்து விடவே அரியாங்குப்பம் ஓடைவெளிப் பகுதியில் உள்ள 70 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டி மீது ஏறினார் இளையராஜா. அங்கிருந்து குதிக்கப் போவதாக மிரட்டினார்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காலை 6 மணிக்கு தொட்டி மீது ஏறியவர் 3 மணி நேரமாக மிரட்டிக்கொண்டே இருந்தார்.
இந் நிலையில், அரியாங்குப்பம் எம்.எல்.ஏ. ஜெயமூர்த்தி தகவல் அறிந்து அங்கு வந்தார். இளையராஜாவிடம்செல்போனில் அவர் பேசினார். கடன் பிரச்சினையை நான் தீர்த்து வைக்கிறேன். இறங்கி வாருங்கள் என்றுகூறினார். அப்போதும் இளையராஜா அசையவில்லை.
இதையடுத்து, நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் எனது பதவியை ராஜினாமர் செய்கிறேன் எனதனது லெட்டர் பேடில் எழுதி கையெழுத்துப் போட்டத் தருவதாக எம்எல்ஏ ஜெயமூர்த்தி கூறவே இளையராஜாமனம் மாறி கீழே இறங்கி வந்தார்.
கீழே வந்த இளையராஜாவை போலீஸார் ஒரே அமுக்காக அமுக்கி கைது செய்தனர். அவர் மீது தற்கொலைமுயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications