சானியாவுக்குப் பிடித்த சச்சின்
டெல்லி:
தனக்கு பிடித்த விளையாட்டு வீரர் டெண்டுல்கர் தான் என்கிறார் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா.
18 வயதே ஆன சானியா டென்னிசில் அடுத்தடுத்து வரலாறுகள் படைத்து வருகிறார். இந் நிலையில் டெல்லியில் ஜனாதிபதி கலாம், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் தத் ஆகியோரை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய சானியா,
இப்போது காயம் காரணமாக ஓய்வில் இருக்கிறேன். வரும் 28ம் தேதி துபாயில் தொடங்கும் ஓபன் டென்னில் போட்டியில் பங்கேற்பேன் என்று நினைக்கிறேன். அதற்குள் குணடைந்துவிடுவேன் என்றார்.
சானியா என்ற புயலால் கிரிக்கெட் கூட மங்கிவிட்டதே, யாரை எடுத்தாலும் சானியா சானியா என்று பேசுகிறார்களே என்று கேட்டபோது,
நம் நாட்டில் கிரிக்கெட் விளையாட்டு அல்ல, அது ஒரு மதம் போலத்தான் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால் கிரிக்கெட்டின் இடத்தை நான் உள்பட யாரும் பிடித்துவிட முடியாது. நானும் கூட நேநரம் கிடைத்தால் கிரிக்கெட் தான் பார்க்கிறேன் என்றார்.
உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் என்ற கேள்விக்கு, அப்கோர்ஸ் சச்சின் தான் என பளிச் என்று பதில் தந்தார் சானியா.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications