பாக். கிரிக்கெட் அணி பயண அட்டவணை
கராச்சி:
இந்திய-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளுக்கு 16 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. துணைக் கேப்டன்பொறுப்பிலிருந்து யூசுப் யுகானா நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக யூனிஸ் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு பாகிஸ்தான் சென்ற இந்திய அணி டெஸ்ட் தொடரையும், ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியது. இந் நிலையில்பாகிஸ்தான் அணி இம்மாத இறுதியில் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இதற்காக 16 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆஸ்திரேலிய தொடர் வரை துணைக் கேப்டன் பொறுப்பிலிருந்த யூசுப் யுகானா நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக யூனிஸ்கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
அகமதாபாத்தில் நடைபெற இருந்த டெஸ்ட் போட்டி ஒரு நாள் போட்டியாக மாற்றப்பட்டதால் போட்டி அட்டவணையில் மாற்றம்செய்யப்பட்டுள்ளது.
வீரர்கள் விவரம்: இன்சமாம் உல் ஹக் (கேப்டன்), யூனிஸ் கான் (துணைக் கேப்டன்), யூசுப் யுகானா, தவுபிக் உமர், சல்மான் பட்,யாசிர் ஹமீத், ஆசிப் கமால், சோயப் மாலிக், கம்ரான் அக்மல் (விக்கெட் கீப்பர்), அர்ஷத் கான், டேனிஷ் கனேரியா, சாகித் அப்ரிதி,நவேத் உல் ஹசன், முகமது சமி, முகமது கலீல் மற்றும் ரசாக்.
இதற்கிடையே திருவனந்தபுரத்தில் போட்டி அட்டவணையை கிரிக்கெட் வாரிய செயலாளர் எஸ்.கே. நாயர் வெளியிட்டார்.அதன்விவரம் விவரம் வருமாறு:
முதல் டெஸ்ட்: மொகாலி- மார்ச் 8-12, 2-வது டெஸ்ட்: கொல்கத்தா -மார்ச் 16-20, 3-வது டெஸ்ட் பெங்களூர்: மார்ச் 24-28. இதுதவிர 6 ஒரு நாள் போட்டிகளும் நடைபெறுகின்றன.
முதல் ஒரு நாள் போட்டி ஏப்ரல் 2 -ந் தேதி கொச்சியிலும், இறுதி ஒரு நாள் போட்டி 17-ந் தேதி டெல்லியிலும் நடைபெறுகிறது.மற்ற நான்கு போட்டிகளுக்கான தேதிகள் அறிவிக்கப்படவில்லை. பாகிஸ்தான் அணி மார்ச் 3-ந்தேதி 3 நாள் பயிற்சி ஆட்டத்தில்ஆடுகிறது.
எஸ்.கே.நாயர் கூறும்போது, போட்டி குறித்த எங்களது அனைத்து கோரிக்கைகளையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொண்டது. சுமார் 6 வருடங்களுக்குப் பிறகு ஒரு முழு தொடரில் விளையாடுவதற்கு பாகிஸ்தான் அணி இந்தியா வருகிறதுஎன்றார்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications