சென்னை வந்த விமானத்தில் பயணி சாவு
சென்னை:
கொல்கத்தாவிலிருந்து சென்னை வந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் 55 வயது பயணி மாரடைப்பால் இறந்தார்.
கொல்கத்தாவிலிருந்து ஜெட் ஏர்வேஸ் விமானம் நேற்றிரவு சென்னை வந்து கொண்டிருந்தது. அதில் குவஹாத்தியைச் சேர்ந்த தாஸ்ஷோபால் என்பவர் தனது மகனுடன் பயணித்தார்.
இதய நோய் உள்ள தாஸ் ஷோபால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்து கொண்டிருந்தார். சென்னைவிமான நிலையத்தை விமானம் நெருங்கிக் கொண்டிருந்தபோது ஷோபாலுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அவருக்கு விமானத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமானக் கட்டுப்பாட்டு அறையும் உஷார்படுத்தப்பட்டது. ஆம்புலன்ஸ், டாக்டர் ஆகியோர் தயார் நிலையில்வைக்கப்பட்டனர். இருப்பினும் விமானம் தரையிறங்கியவுடன் அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து பிரேதப் பரிசோதனைக்காக ஷோபாலின் உடல் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications