சென்னை பெருநகர காவல்துறை - ஒரு பார்வை
சென்னை:
செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த சென்னைப் புற நகர்ப் பகுதிகளை மாநகரக் காவல்துறையுடன்இணைத்ததைத் தொடர்ந்து கூடுதலாக 1,640 காவலர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது.
செங்கை கிழக்கு காவல் மாவட்டத்தில் உள்ள 41 காவல் நிலையங்கள் மாநகர காவல்துறை ஆணையரின் கட்டுப்பாட்டின் கீழ்கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த இணைப்பைத் தொடர்ந்து சென்னை மாநகர காவல்துறை பெருநகர காவல்துறையாகவிரிவாகிவிட்டது.
இதைத் தொடர்ந்து சென்னை பெருநகர காவல்துறைக்கு கூடுதலாக 1,640 போலீசாரை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது.கூடுதலாக சேர்ந்துள்ள 41 காவல் நிலையங்களில் மொத்தம் 2,685 காவலர்களே பணியில் உள்ளனர்.
எனவே கூடுதலாக நியமிக்கப்படவுள்ள காவலர்கள் இந்தப் பகுதிகளில் பணியில் அமர்த்தப்படுவர்.
புறநகர்ப் பகுதி காவல் நிலையங்களில், ஒவ்வொரு காவல் நிலையத்திலும் சராசரியாக 20 காவலர்கள் உள்ளனர். சென்னை நகரில்ஒவ்வொரு காவல் நிலையத்திலும் சராசரியாக 60 பேர் வரை உள்ளனர். இதை சமநிலைப் படுத்தும் வகையில் புதிய காவலர்கள்நியமிக்கப்பவுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை நகர காவல் நிலையங்களில் இப்போது மொத்தம் 11,281 போலீஸார் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிதாக இணையும் 41 காவல் நிலையங்களிலும் சட்டம் ஒழுங்குப் பிரிவு மட்டுமே உள்ளது. அதை மாற்றி, குற்றப் பிரிவுகளையும்போக்குவரத்துப் பிரிவுகளையும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல்துறை - ஒரு பார்வை
சென்னை நகர பரப்பளவு: 172 சதுர கி.மீ.
புறநகர்ப் பரப்பளவு: 415 சதுர கி.மீ.
நகர காவலர்கள் எண்ணிக்கை: 11,281
புறநகர் காவலர்கள் எண்ணிக்கை: 2,685
நகர காவல் நிலையங்கள்: 80
புறநகர் காவல் நிலையங்கள்: 41
சென்னை நகர காவல் மாவட்டங்கள்: 9, உட் கோட்டங்கள்: 20
புறநகர் உட் கோட்டங்கள்: 7
சென்னைப் பெருநகர மக்கள் தொகை: 86,31,989
சென்னை காவல்துறையுடன் கூடுதலாக இணைந்துள்ள புறநிகர் காவல் நிலையகள்:
ஆதம்பாக்கம், அம்பத்தூர், அம்பத்தூர் எஸ்டேட், ஆவடி, சிட்லபாக்கம், குரோம்பேட்டை, கொரட்டூர், குன்றத்தூர், மாதவரம்,மடிப்பாக்கம், மதுரவாயல், மணலி, மணலி புதுநகர், மாங்காடு, மீனம்பாக்கம், மீனம்பாக்கம் விமான நிலையம், மில்க் காலனி,முத்தரப்பு புதுப்பட்டி, நந்தம்பாக்கம், நீலாங்கரை,
பழவந்தாங்கல், பல்லாவரம், பள்ளிக்கரணை, பட்டாபிராம், பீர்க்கங்கரணை, பூந்தமல்லி, செங்குன்றம், சங்கர் நகர், சாத்தாங்காடு,சேலையூர், எஸ்.ஆர்.எம்.சி, பரங்கிமலை, தாம்பரம், ஆவடி டேங்க் பேக்டரி, திருநின்றவூர், திருவேற்காடு, திருமுல்லைவாயில்,துரைப்பாக்கம், வளசரவாக்கம், புழல், எண்ணூ
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications