சுனாமியால் தடைபட்ட திருமணங்களை நடத்தி வைத்த கலெக்டர் ராதாகிருஷ்ணன்
நாகப்பட்டிணம்:
சுனாமியால் தடைபட்ட 6 ஜோடிகளின் திருமணங்களை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ராதாகிருஷ்ணன் நடத்தி வைத்தார்.
கடந்த டிசம்பரில் சுனாமி தாக்கியதால், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான திருமணங்களும் ஒத்திவைக்கப்பட்டுவிட்டன.
![]() |
இந்த அமைப்பின் உதவியால் நாகப்பட்டிணத்தில் திருமணம் தடைபட்ட 8 ஜோடிகளுக்கு மாரியம்மன் கோவிலில் திருமணம்நடத்தி வைத்த ராதாகிருஷ்ணன், நாகூரில் திருமணம் தடைபட்ட மேலும் 6 ஜோடிகளுக்கு ஒரு திருமண மண்டபத்தில திருமணம்நடத்தி வைத்தார்.
நாகூர் திருமண நிகழ்ச்சியில் பேசிய ராதாகிருஷ்ணன்,
சுனாமியால் தடைபட்ட இந்து ஜோடிகளின் திருமணத்தை புரோகிதர் உதவியுடன் யாகம் வளர்த்து நடத்தி வைக்கிறது ஒருகிருஸ்துவ தொண்டு அமைப்பு. இந்தத் திருமணம் நடப்பது இஸ்லாமிய புனிதத் தலமான நாகூரில்.
இந்தத் திருமண நிகழ்ச்சி கூட மத ஒருமைப்பாட்டுக்கு எடுத்துக்காட்டான நிகழ்ச்சியாக மாறிவிட்டதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.சுனாமி தந்த வலிகளை மறந்து, குடும்ப வாழ்க்கையில் காலடி எடுத்து வைக்கும் இந்தத் தம்பதிகளை என் குடும்பத்தின்சார்பிலும், தமிழக அரசின் சார்பிலும் வாழ்த்துகிறேன்.
இந்த திருமண நிகழ்ச்சியில் தம்பதிகளின் உறவினர்கள் மட்டுமின்றி டிஎம்ஐ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் விஜி, மாவட்டநிவாரணப் பிரிவு வருவாய் அதிகாரி ஜெயராமன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!













Click it and Unblock the Notifications