அமெரிக்காவுக்கு ஏர் இந்தியாவின் கூடுதல் விமானங்கள்
சியாட்டில்:
டெல்லி மற்றும் மும்பையிலிருந்து அமெரிக்காவின் முக்கிய நகரங்களுக்கு கூடுதல் விமானங்களை இயக்கஏர்-இந்தியா முடிவு செய்துள்ளது.
சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ, பிராங்பர்ட், ஹூஸ்டன் ஆகிய நகரங்களுக்கு டெல்லி, மும்பை ஆகியஇடங்களிலிருந்து மார்ச் மாதம் முதல் கூடுதல் விமானங்களை இயக்கப்படவுள்ளன.
இது தொடர்பாக சியாட்டிலில் ஏர்-இந்தியா நிறுவன மக்கள் தொடர்பு அதிகாரி பார்கவா கூறுகையில்,
ஏர் இந்தியாவின் வருவாய் இந்த ஆண்டு 20 சதவீதம் அதிகரித்துள்ளது. அமெரிக்கா- இந்தியா இடையிலானபயணிகள் போக்குவரத்து இதற்கு முக்கிய காரணமாக இருந்தது.
இதனால் அமெரிக்காவுக்கு மேலும் அதிக விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளோம். இதற்காக கூடுதல்விமானங்களை குத்தகைக்கு எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிகாகோ மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களுக்கு மார்ச் 28-ந்தேதி முதல் தினமும் விமானங்கள் இயக்கப்படும்.அடுத்த ஒரு வருடத்திற்குள் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும்.
அடுத்த மாத இறுதிக்குள் நியூயார்க், நேவர்க், சிகாகோ மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களுக்கு வாரத்திற்கு 28சர்வீஸ்கள் இயக்கப்படும்.
அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திற்குள் கேரளாவின் முக்கிய மூன்று நகரங்களிலிருந்து குறைந்த கட்டணத்தில் அரபுநாடுகளுக்கு விமானங்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் பார்கவா.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications