டி.ஆர்.பாலுவுக்கு எதிரான வழக்கு: மனுதாரருக்கு நீதிபதி கண்டனம்
சென்னை:
தென் சென்னை தொகுதியில் டி.ஆர். பாலு எம்.பியாக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடுத்தவர், உரிய பதில் மனுவைவருகிற 28ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாவிட்டால் வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிசொக்கலிங்கம் எச்சரிக்கை விடுத்தார்.
தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் டி.ஆர்.பாலு. இரண்டு மனைவிகள் உடையடி.ஆர்.பாலு தேர்தலில் போட்டியிட்டது சட்டப்பஐ குற்றமாகும். எனவே அவரது தேர்தலை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக்கோரி அதே தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட புருஷோத்தமன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி சொக்கலிங்கம், இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு டி.ஆர்.பாலுவுக்கு நோட்டீஸ்அனுப்பினார். டி.ஆர்.பாலுவும் அதற்கு பதில் அனுப்பினார். அதில், மனுதாரர் தனது ஆட்சேபத்தை வாக்குப் பதிவுக்கு முன்பே உரியதேர்தல் அதிகாரியிடம் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யவில்லை. எனவே அவரது மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கூறியிருந்தார்.
இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு புருஷோத்தமனுக்கு நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் பலமுறை வாய்தா கோரியும் இதுவரைபுருஷோத்தமன் விளக்கம் அளிக்கவில்லை.
இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது புருஷோத்தமனின் வழக்கறிஞர் மீண்டும் வாய்தா கேட்டார். ஆனால் இதற்குடி.ஆர்.பாலுவின் வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து வருகிற 28ம் தேதி பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும். அதுதான் இறுதியான வாய்ப்பு. அன்று பதில் மனு தாக்கல்செய்யப்படாவிட்டால் வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என்று நீதிபதி சொக்கலிங்கம் கடுமையாக எச்சரித்து வழக்கை ஒத்திவைத்தார்.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications