செல்போனில் போலீஸ் மிரட்டுகிறது: குருமூர்த்தி புகார்
சென்னை:
கைது செய்து விடுவதாக தன்னை போலீஸார் செல்போன் மூலம் மிரட்டுவதாக ஆடிட்டர் குருமூர்த்தி ராஜகோபால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சங்கரராமன் கொலை வழக்கில் பிரபல ஆடிட்டரும், கட்டுரையாசியருமான குருமூர்த்தி மீது விசாரணையைத் திசை திருப்பியதாகவும்,உண்மையான தகவல்களைத் தர மறுத்ததாகவும் காஞ்சிபுரம் தனிப்படை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து குருமூர்த்தி தலைமறைவாகி விட்டார்.
இந் நிலையில் தன் மீது காஞ்சிபுரம் போலீஸார் பதிவு செய்துள்ள வழக்கை எதிர்த்து நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்செய்தார். இந்த மனு நீதிபதி கே.டி.சிவ சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது குருமூர்த்தி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.ஆர்.ராஜகோபாலன்,
அரசியல் சட்டம் 19(1)ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அடிப்படை கருத்து சுதந்திரத்தை தடுக்கும் வகையில் போலீஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர். பொய்யான புகார்களின் பேரில், உள் நோக்கத்துடன் இந்த வழக்கு பாடப்பட்டுள்ளது. இதற்குத் தடை விதிக்க வேண்டும்என்றார்.
அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துரைசாமி, இந்த மனு விசாரணைக்கு ஏற்புடையதே அல்ல, அரசு தரப்பு விளக்கம் அளிக்க காலஅவகாசம் தேவை என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, விசாரணையை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இந்த மனுவின் மீதான விசாரணை முடியும் வரை போலீஸார் பதிவு செய்து வழக்குக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றகுருமூர்த்தி தரப்பின் கோரிக்கையை நீதிபதி நிராகரித்துவிட்டார்.
இந் நிலையில் இன்று குருமூர்த்தியின் வழக்கறிஞர் ராஜகோபால் நீதிபதி சிவசுப்ரமணியத்திடம் ஒரு புகார் மனுவை அளித்தார்.
அதில், குருமூர்த்தியை செல்போனில் தொடர்பு கொண்டு காஞ்சிபுரம் போலீஸார் கைது செய்யப் போவதாக கூறி மிரட்டுகிறார்கள். எனவேமனு மீதான விசாரணையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதையடுத்து குருமூர்த்தி தாக்கல் செய்த ரிட் மனு இன்று பிற்பகலே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி அறிவித்தார்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications