நெஞ்சு வலி: சென்னைக்கு கொண்டு வரப்படுகிறார் ரவி சுப்பிரமணியம்
காஞ்சிபுரம்:
நெஞ்சு வலி காரணமாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காண்டிராக்டர் ரவி சுப்பிரமணியம் சென்னைக்குக்கொண்டு வரப்படுகிறார்.
சங்கரராமன் கொலை வழக்கில் அப்ரூவரான ரவி சுப்பிரமணியம் காஞ்சிபுரம் கிளைச் சிறையில் தொடர்ந்து அடைக்கப்பட்டுள்ளார். நேற்றுமாலை அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் உடனடியாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு இரவு முழுவதும்அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந் நிலையில் ரவி சுப்பிரமணியத்தை சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்து மேல் சிகிச்சை அளிக்க காஞ்சிபுரம்தனிப்படை போலீஸார் முடிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து இன்று அவரை மிகுந்த பாதுகாப்புடன் போலீஸார் சென்னைக்குக்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே சில வாரங்களுக்கு முன் ரவி சுப்பிரமணியத்துக்கு நெஞ்சு வலி வந்து சிகிச்சை பெற்றார் என்பது நினைவிருக்கலாம்.
கொலை மிரட்டல் தொடர்பாக ரவி சுப்பிரமணியம் மற்றும் அவரது மனைவி சித்ரா கொடுத்த புகாரின் பேரில், ஜெயேந்திரர், சங்கரமடத்தின் வழக்கறிஞர்கள் தியாகராஜன், சண்முகம், ரேவதி, நசீரா பானு ஆகியோர் மீது காஞ்சிபுரம் போலீஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.
இந்த புதிய வழக்கில் ஜெயேந்திரரும் கைதாகக் கூடும் என்ற சூழலில், ரவி சுப்பிரமணியத்துக்கு நெஞ்சு வலி வந்துள்ளது குறிப்பிடத்தக்ககது.
இந்த வழக்கில் ஜெயேந்திரர் சார்பில் முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல,வழக்கறிஞர்கள் தியாகராஜன், சண்முகம், ரேவதி ஆகியோர் சார்பில் செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. நசீரா ஏற்கனவே முன் ஜாமீன் பெற்றுவிட்டார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications