ஜெெ பிறந்த நாள் வளைவு: அரசியல்வாதிகளுக்கு நீதிபதி அறிவுரை
சென்னை:
அரசியல்வாதிகள், ஆடம்பர செலவுகளைத் தவிர்க்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு அறிவுரை கூறியுள்ளார்.
பெரம்பலூர் அருகே முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி அலங்கார வளைவு அமைக்கப்பட்டது. இதை எதிர்த்து பெரம்பலூர் ஊராட்சி கவுன்சிலர் அப்துல் பாரூக் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து டிவிஷன் பெஞ்சில் பாரூக் அப்பீல் செய்தார். அந்த மனுவை தலைமை நீதிபதி கட்ஜு, நீதிபதி முருகேசன் ஆகியோர் விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர்.
விசாரணையின்போது அரசியல்வாதிகளுக்கு கட்ஜூ சில அறிவுரைகளை வழங்கினார்.
அவர் கூறுகையில், மக்கள் மனதில் இடம் பெற அரசியல்வாதிகள் முயல வேண்டும். அதை விடுத்து ஆடம்பர செலவுகளை அவர்கள் நாடக் கூடாது. சிலை வைப்பது, படம் திறப்பது போன்றவை வீண் செலவுகள். இதனால் மக்களுக்கு என்ன நன்மை என்பதை அரசியல்வாதிகள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மக்கள் நலனுக்குத்தான் அரசியல்வாதிகள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமே தவிர பிற விவகாரங்களில் அக்கறை செலுத்தக் கூடாது. மக்களுக்கு அவர்களால் இடையூறு நேரக் கூடாது.
உயர்நீதிமன்றக் கிளை திறப்புக்காக நான் மதுரை சென்றபோது 20 அடிக்கு ஒரு போலீஸ்காரர் நிறுத்தப்பட்டிருந்தார். இது தேவையற்றது. நான் உயர் அதிகாரியைத் தொடர்பு கொண்டு இவ்வாறு செய்யாதீர்கள், போலீஸ்காரர்களின் நேரத்தை வீணடிக்கக் கூடாது என்று அறிவுறுத்தினேன் என்றார் கட்ஜு.
பின்னர் வழக்கு விசாரணையை மார்ச் 1ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications