லேடீஸ் ஹாஸ்டலில் புகுந்த திருடன்: வளைத்து பிடித்த மாணவிகள்
சென்னை:
சாலையில் சென்ற பெண்ணிடம் தங்ககச் சங்கிலியைப் பறித்த திருடன், தப்ப முயன்று பெண்கள் விடுதிக்குள் நுழைந்தான். அவனை மாணவிகளுள் வளைத்துப் பிடித்து மொத்து மொத்தி போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
சென்னை கோட்டூர்புரம் மேம்பாலப் பிளாட்பாரத்தில் ஜோதிலட்சுமி என்ற பெண் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் ஜோதிலட்சுமியின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு ஓடினான்.
அவனை ஜோதிலட்சுமியும் சாலையில் சென்ற சில பெண்களும் துரத்திச் சென்றனர். அப்போது அந்த வாலிபர் நந்தனம் விரிவாக்கப் பகுதியில் உள்ள பெண்கள் விடுதிக்குள் நுழைந்துவிட்டான்.
இதையடுத்து அங்கிருந்த மாணவிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து திருடனை வளைத்துப் பிடித்தனர். மாணவிகள் தந்த தர்ம அடிகளைத் தாங்க முடியாத அந்த நபர், சரணடைந்தார்.
அவரது பெயர் சுப்பையா என்றும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. வேலை தேடி சென்னை வந்த சுப்பையா, கையில் பணம் இல்லாததால் திருட்டில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார். பின்னர் அவ மாணவிகள் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications