சுனாமி: நாகை அரசு மருத்துவமனை ரூ. 10 கோடி செலவில் சீரமைப்பு
நாகப்பட்டினம்:
சுனாமி அலைகளால் கடுமையாக சேதமடைந்துள்ள நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையை சீரமைக்க ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
டிசம்பர் 26ம் தேதி நடந்த சுனாமி அலைகளின் கொடூர தாக்குதலில் நாகை மாவட்டம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர், பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.
நாகை அரசு மருத்துவமனையும் மிகக் கடுமையாக சேதமடைந்தது. மருத்துவமனை முற்றிலும் சேதமடைந்துள்ளதால் அதை சீரமைக்க துரித கால நடவடிக்கையை அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் தளவாய் சுந்தரம் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ரூ. 10 கோடி செலவில் முற்றிலும் புதுப்பிக்கப்படும். இந்தப் பணி இந்த ஆண்டு இறுதியில் முடிவுறும்.
இதற்குத் தேவையான நிதி, இயற்கை சீரழிவு மேலாண்மை நிதியிலிருந்தும், எம்.பிக்கள் நிதியிலிருந்தும் சேகரிக்கப்படும். அதேபோல, சாந்தி மோகன் அறக்கட்டளை என்ற தனியார் அறக்கட்டளை ரூ. 3 கோடி நிதியைத் தருகிறது.
இந்த நிதியில், மருத்துவமனையில் கூடுதலாக ஒரு பிரசவ வார்டு, குழந்தைகள் பராமரிப்பு வார்டு, மருத்துவமனைக்கு சுற்றுச் சுவர் ஆகியவை கட்ட சாந்தி மோகன் அறக்கட்டளை முன்வந்துள்ளது என்றார் தளவாய் சுந்தரம்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications