பணிந்தார் இளங்கோவன்: வருத்தம் தெரிவித்தார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காமராஜர் ஆட்சி வர வேண்டும் என்றுதான் நான் வலியுறுத்தி வருகிறேன். தவறாக எதையும் பேசவில்லை என்று மத்திய வர்த்தகத்துறைஇணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விளக்கம் தந்துள்ளார்.

கூட்டணி ஆட்சி, ஆட்சியில் பங்கு என்று தொடர்ந்து பேசி வரும் இளங்கோவன் நேற்று திடீரென கட்சி மேலிடத்தால் டெல்லிக்குவரவழைக்கப்பட்டு கண்டிக்கப்பட்டார்.

திமுக-காங்கிரஸ் உறவைக் கெடுக்க வேண்டாம், கருணாநிதியை சமாதானம் செய்ய ஒரு அறிக்கை வெளியிட்டு பிரச்சினையை முடியுங்கள்என்று அவருக்கு காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து டெல்லியில் இளங்கோவனின் வெளியிட்ட அறிக்கை:

சென்னையில் நான் அளித்த பேட்டி பத்திரிக்கைகளில் தவறாக வெளியாகியிருக்கிறது. இது மிகவும் துரதிஷ்டவசமானது. கூட்டணி குறித்துநான் எதையும் கூறவில்லை. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்குத்தான் அந்த அதிகாரம் உள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது கூட்டணித் தலைவர்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வர பெருமளவு பாடுபட்டவன் நான்.எனவே அந்தத் தலைவர்களை நான் விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை.

நான் திமுக தலைவர் கருணாநிதியை பெரிதும் மதிக்கிறேன். நான் பேசியது அவருக்கு சங்கடத்தை, மன வருத்தத்தைத் தந்திருக்குமானால்அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கட்சியினரிடம் விளக்கவும், காங்கிரஸ்கட்சியை வலுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் குறித்து தொண்டர்களிடம் விளக்கவுமே அக் கூட்டம் கூட்டப்பட்டது. அதில் எந்தஉள்நோக்கமும் இல்லை என்று கூறியுள்ளார் இளங்கோவன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+