பக்தர்களுக்கு ஜெயேந்திரர் தரப் போகும் பரிசு!
கலவை:
மகா சிவராத்தியை முன்னிட்டு 1008 முறை ஓம் நமச்சிவாய என்று எழுதி கலவை மடத்திற்கு அனுப்பினால் ஜெயேந்திரர் ஆசிர்வதித்தபேனா, சிவன் படம் மற்றும் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும் என கலவை மட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
சங்கரராமன் கொலைக்குப் பிறகு காஞ்சி சங்கர மடம் பொலிவிழந்து போயுள்ளது. ஜாமீனில் விடுதலையாகியுள்ள ஜெயேந்திரர்காஞ்சிபுரம் வராமல், வேலூர் மாவட்டம் கலவையில் உள்ள சங்கர மடத்தில் தங்கியுள்ளார். தற்போது அந்த மடம் புதுப்பிக்கப்பட்டுவிரிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஜெயேந்திரர் இப்போதைக்கு காஞ்சிபுரம் மடத்திற்கு வர முடியாது என்பதால் கலவை மடமே தற்போது காஞ்சி காமகோடி பீடமாகமாறியுள்ளது. இந் நிலையில் கலவை மடத்தின் சார்பில் மாணவர்களுக்கு சில பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மார்ச் 8ம் தேதி வரும் மகா சிவராத்தியை முன்னிட்டு 1008 முறை ஓம் நமச்சிவாய என்று எழுதி ஜெயேந்திரருக்கு கடிதம் அனுப்பினால்அவர்களுக்கு ஜெயேந்திரர் ஆசிர்வதித்த சிவன் படம், பிரசாதம், பத்தாவது மற்றும் பிளஸ் டூ மாணவர்களாக இருந்தால் அவர்களுக்கு ஒருபேனாவும் அனுப்பி வைக்கப்படும் என கலவை மடம் தெரிவித்துள்ளது.
வழக்குகளால் சூழப்பட்டுள்ள சங்கர மடத்தின் பெயரை மாற்றும் விதமாகவும், பக்தர்களை மீண்டும் ஆன்மீகப் பாதைக்குத் திருப்பும்விதமாகமாவும் இந்தப் பரிசுகள், பிரசாதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications