சென்னை காவல்துறையுடன் இணைந்தது செங்கை கிழக்கு
சென்னை:
சென்னை மாநகரக் காவல் துறையுடன், செங்கை கிழக்கு மாவட்ட காவல் நிலையங்கள் முறைப்படி இணைக்கப்பட்டு விட்டன.
சென்னை மாநகர காவல்துறை எல்லையை மாற்றி சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி சென்னைப் புறநகர்ப்பகுதிகளை உள்ளடக்கிய செங்கை கிழக்கு காவல் மாவட்டம் சென்னையுடன் இணைவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, செங்கை கிழக்கு மாவட்டம், சென்னை காவல்துறையுடன் இணைவதற்கான அறிவிப்பை சமீபத்தில்உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.
இதைத் தொடர்ந்து செங்கை கிழக்கு மாவட்டத்தில் உள்ள 41 காவல் நிலையங்களையும் சென்னை காவல்துறையுடன் இணைத்து தற்போதுஅறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த 41 காவல் நிலையங்களும், மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் கட்டுப்பாட்டின் கீழ்கொண்டு வரப்பட்டுள்ளன. இதையடுத்துசென்னை பெருநகர காவல்துறை ஆணையரகம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
சென்னை பெருநகரில் தற்போது 155 காவல் நிலையங்களும், 14,000 காவலர்களும் உள்ளனர். கூடுதலாக 2,000 காவலர்கள் விரைவில்நியமிக்கப்படவுள்ளனர்.
பெருநகர காவல்துறை இயக்கத்திற்கு வந்துள்ள நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஒரு கூடுதல் ஆணையர், 4 துணை போலீஸ்ஆணையர்கள், உதவி ஆணையர்கள் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர்.
-
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
இப்போ தெரிஞ்சு போயிரும்.. இன்னொரு எலக்சனுக்கு தயாராகும் தமிழகம்! சுறுசுறுப்பாய் தொடங்கிய ஏற்பாடுகள்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு












Click it and Unblock the Notifications