ரயில்வே பட்ஜெட் ஏமாற்றமளிக்கிறது: ஜெ.
சென்னை:
மத்திய ரயில்வே பட்ஜெட் ஏமாற்றம் தருவதாக அமைந்துள்ளது என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
மத்திய ரயில்வே பட்ஜெட் குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்குப் போக்குவரத்தில்நல்ல வளர்ச்சி காணப்பட்டாலும் கூட, அதற்கேற்ற வகையில் திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை.
மொத்த ரயில்வே திட்ட நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவாக உள்ளது. தமிழகத்திற்கு புதிய ரயில்கள், புதிய ரயில் பாதைகள், திட்ட ஆய்வுப்பணிகள் ஆகியவை அறிவிக்கப்பட்டிருந்தாலும், சென்னை மக்களால் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கும்திருவான்மியூர்-வேளச்சேரி ரயில் பாதை அமைக்கும் பணி 2007ல்தான் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ஏமாற்றம் தருகிறது.இதை ஏற்றுக் கொள்ள முடியாது.
வேளச்சேரி-பரங்கி மலை இடையிலான ரயில் பாதை அமைக்கும் பணிக்கான செலவில், 3ல் 2மடங்கு செலவை தமிழக அரசு ஏற்பதாகஅறிவித்தும் அதுதொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியிடப்படாதது ஏமாற்றம் தருகிறது.
சென்னை-கடலூர் புதிய ரயில் மார்க்கம் தொடர்பான ஆய்வு இன்னும் சரிவர முடிவடையாத நிலையில் அதுகுறித்து அறிவிப்புவெளியாகியுள்ளது குழப்பத்தைத் தருகிறது. மத்தியில் தமிழகத்தைச் சேர்ந்த 12 அமைச்சர்கள் இருந்தும், முறையான ஆய்வுக்கு வழிபிறக்காதது வருத்தம் தருகிறது.
வேலையற்றோருக்கு ரயில் கட்டண சலுகை, கேஸ், மண்ணெண்ணை ஆகியவற்றை கொண்டு செல்ல கட்டணக் குறைப்பு, தமிழகத்திற்குப்புதிய ரயில்கள் ஆகியவை அறிவிக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.
மொத்தத்தில் இந்த ரயில் பட்ஜெட் பாதி நல்ல முட்டை, பாதி அழுகல் முட்டை என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..!












Click it and Unblock the Notifications