சரவணா ஸ்டோர்ஸில் அதிரடி சோதனை
சென்னை:
சென்னையில் உள்ள பிரபலமான சரவணா ஸ்டோர்ஸ் விற்பனை நிலையத்தில் நேற்று முதல் வணிக வரித்துறை அதிகாரிகள் அதிரடிசோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் உள்ளது சரவணா ஸ்டோர்ஸ். குண்டூசி முதல் மின்னணுப் பொருட்கள் வரை இங்குகிடைக்காத பொருளே இல்லை எனும் அளவுக்கு தமிழகம் முழுவதும் பிரபலமான பல்பொருள் அங்காடி சரவணா ஸ்டோர்ஸ்.
இங்கு நேற்று மாலை வணிக வரித்துறை அதிகாரிகள் திடீரென வந்தனர். கடையில் இருந்த வாடிக்கையாளர்களை வெளியேற்றி விட்டுஅதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். நேற்று இரவு முழுவதும் விடிய விடிய சோதனை நடந்தது.
இன்று காலையும்தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது. சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் அதற்குச் சொந்தமான பாத்திரக் கடை, நகைக்கடை ஆகியவற்றை மூடி அதிகாரிகள் தீவிர சோதனை மற்றும் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் பல கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கிடைத்த தகவலையடுத்து இந்த சோதனை நடந்துவருவதாகக் கூறப்படுகிறது. இந்த சோதனையின்போது நிறுவனத்தில் இருப்பு உள்ள பொருட்கள், விற்ற பொருட்கள் உள்ளிட்டவை குறித்துஅதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தில் சோதனை நடந்து வருவது தி.நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில்ஏராளமானோர் கூடியுள்ளனர்.
-
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
அடித்து பெய்யப்போகும் கனமழை! கோவை டூ கன்னியாகுமரி.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications