ஸ்டண்ட் அடிக்கிறார் இளங்கோவன்: பாஜக
சென்னை:
அனுதாபம் தேடுவதற்காக திமுக தலைவர் கருணாநிதி குறித்து விமர்சனம் செய்து பேசி ஸ்டண்ட் அடிக்கிறார்இளங்கோவன் என்று பாஜக அகில இந்திய செயலாளர் இல.கணேசன் கூறியுள்ளார்.
கணேசன் கூறுகையில், மத்திய அமைச்சர் பதவியிலிருந்து இளங்கோவனை நீக்க காங்கிரஸ் மேலிடம் முடிவுசெய்துள்ளது. அங்கு கோஷ்டிப் பூசல் மபற்றியுள்ளதால் இளங்கோவன் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகஉணர்கிறேன்.
இதன் காரணமாகவே, தனது பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக, கருணாநிதி குறித்து கருத்து கூறிபரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் இளங்கோவன். எப்படியும் திமுகவிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பும், அந்த எதிர்ப்புதனக்கு அனுதாபத்தைத் தேடிக் கொடுக்கும் என்பது அவரது எண்ணம்.
தன் மீது கட்சி நடவடிக்கை எடுத்தால் அது பழிவாங்கும் நடவடிக்கையாகவே பார்க்கப்படும் என்பதும் அவரதுஎண்ணம். இதனால் கிடைக்கும் அனுதாபத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளமுடியும் என்றும் அவர் நினைக்கிறார்.
மத்திய அரசைப் பொருத்தவரை திமுகவின் ஆதரவு அவர்களுக்குக் கண்டிப்பாக தேவை. எனவே இளங்கோவனைபலிகடாவாக்க அவர்கள் தயங்க மாட்டார்கள். வருகிற சட்டசபைத் தேர்தலில் கூடுதல் இடங்களைப் பெற அவர்கள்இப்போதே அடிபோட ஆரம்பித்து விட்டார்கள்.
பேரம் பேசும் சக்தியை அதிகரிக்க அவர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகளின் முதல் கட்டம்தான் இளங்கோவன்விவகாரம்.
காங்கிரஸைப் போலவே பாமகவும் தனது மறைமுக மிரட்டலைத்தொடங்கி விட்டது. தனது சக்தியைக் காட்டும்முயற்சிகளில் அது இறங்கியுள்ளது. ஆனால் இவற்றை வைத்து திமுக கூட்டணியில் பிளவு ஏற்படும் என கூறமுடியாது.
கூட்டணிக் கட்சிகளை திமுக அரவணைத்துச் செல்வதைப் பொருத்தே கூட்டணியில் பிளவு வருமா, இல்லையாஎன்பதைச் சொல்ல முடியும் என்றார் இல.கணேசன்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications