இளங்கோவனுக்கு ஆதரவு பெருகுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது காங்கிரஸ் கட்சியின் உள் விவகாரத்தில் தலையிடுவதைப்போலாகும். இதை காங்கிரஸ் மேலிடம் அனுமதிக்கக் கூடாது என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல தலைவர்கள்கருத்து தெரிவித்துள்ளனர்.

இளங்கோவனுக்கு எதிராக திமுவினர் கிளம்பியிருப்பதையடுத்து இளங்கோவனுக்கு ஆதரவாக காங்கிரஸில்குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. தஞ்சை காங்கிரஸ் இளங்கோவனுக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளது.

இந் நிலையில் சத்தியமூர்த்தி பவனிலும் இளங்கோவனுக்கு ஆதரவாக பல தலைவர்கள் கருத்து தெரிவிக்கஆரம்பித்துள்ளனர். தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் சு. மங்களராஜ் திமுகவின் தீர்மானத்தைக்கண்டித்துள்ளார். அவர் கூறுகையில், காமராஜர் ஆட்சி வர வேண்டும் என்றால் காங்கிரஸார் என்ன செய்யவேண்டும் என்பதைத்தான் இளங்கோவன் கூறினார்.

தனிப்பட்ட முறையில் கருணாநிதியையோ அவரது குடும்பத்தையோ அவர் தரம் தாழ்த்திப் பேசவில்லை.இன்னொரு கட்சி ஆட்சி அமைப்பதற்காக ஙூாம் உழைப்பதை விட, ஆட்சியில் பங்கு கேட்கலாம் என்றுதான் அவர்கூறினார். இதில் என்ன தவறு இருக்கிறது?

யாரோ கூறியதை கேட்டுக் கொண்டு இளங்கோவன் மீது டவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக கூறுவதுகண்டனத்துக்குரியது. திருக்குறளுக்கு உரை எழுதும் அளவு புலமை படைத்த கருணாநிதி, உண்மை என்ன என்றுநன்றாக விசாரித்து விட்டு தீர்மானத்தை கொண்டு வந்திருக்கலாம்.

பிரதமரும், காங்கிரஸ் தலைவர் சோனியாவும் தன்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்கள், அதுஅவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது என்று கருணாநிதி கூறுகிறார். அப்படி பேசிய பின்னும், அவர்களதுபெருந்தன்மையை வெளிப்படுத்திய பிறகும் தீர்மானம் கொண்டு வருவது எந்த கணக்கில் சேரும்? என்று கேட்டார்அவர்.

இதேபோல தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் குப்பண்ணா விடுத்துள்ள அறிக்கையில், மத்தியில்காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி இருப்பதைப் போல மாநிலத்திலும் மக்கள் விரும்புகிறார்கள்.

35 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத காங்கிரஸ் தற்போது ஆட்சி அமைக்க விரும்புகிறது. இத்தனை காலமாகஏதாவது ஒரு கட்சியுடன் சேர்ந்து அவர்களுக்குப் பல்லக்கு தூக்கியே வந்திருக்கிறது காங்கிரஸ். தங்களுக்குகாங்கிரஸ் கட்சி பல்லக்கு தூக்குவதைத்தான் மற்ற கட்சிகளும் விரும்புகின்றன.

காங்கிரஸ் தொண்டர்களின் மனதில் இந்த வடு ஆறாமல் இருந்து வருகிறது. இதைத்தான் அன்றைக்கு மனவேதனையுடன் வெளிப்படுத்தினார் இளங்கோவன். அவரது கருத்து கட்சியினர் மத்தியில் புதிய வேகத்தைஏற்படுத்தியுள்ளது. தனது கட்சி வளர்ச்சி பற்றி அந்தக் கட்சிக்காரர், மூத்த தலைவர் பேசினால் என்ன தப்பு? அதுஏன் திமுகவுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது.?

காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீது நடவடிக்கைஎடுக்குமாறு கூற திமுகவுக்கு என்ன உரிமை இருக்கிறது.? அப்படிக் கூற அவர்கள் யார்?

அப்படியானால் திமுக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாற கோர காங்கிரஸுக்கு உரிமை உண்டாஎன்பதையும் திமுக தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

தஞ்சை காங். ஆதரவு:

இதற்கிடையே, திமுக கோரிக்கையை ஏற்று மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை எடுத்தால் மாபெரும்போராட்டம் நடத்தப்படும் என தஞ்சாவூர் மாவட்ட காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தஞ்சை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கரு. சண்முகம் கூறுகையில், இளங்கோவன் சொன்னதில் என்ன தவறு? அப்படியே தவறாக இருந்தாலும் அவர் மீதுநடவடிக்கை எடுக்கக் கூற திமுகவுக்கு என்ன உரிமை உள்ளது?

வாரிசு அரசியலை மேற்கொண்டு வரும் திமுகவுக்கு ஜனநாயக ரீதியில் செயல்படும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவரைக் குறை கூற கொஞ்சம் கூடஅருகதை கிடையாது.

திமுகவின் கோரிக்கையை ஏற்று காங்கிரஸ் மேலிடம் இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது. அப்படி மீறி எடுத்தால் மாபெரும் போராட்டம்நடத்துவோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+