டிஆர்ஓ காரில் கள்ளச் சாராய ரெய்டு நடத்திய ஏட்டையாக்கள்
கடலூர்:
கடலூர் மாவட்ட வருவாய் அதிகாரியின் (டி.ஆர்.ஓ) காரை வழிமறித்து, கள்ளச் சாராயம் இருக்கிறதா எனசோதனையிட்ட 3 தலைமைக் காவலர்கள் (ஏட்யாைக்கள்) இடமாற்றம் செய்யப்பட்டனர்.
கடலூர் மாவட்ட வருவாய் அதிகாரியாக இருப்பவர் எம்.கணேசன். இவரும், மனைவி நாகலட்சுமியும் சமீபத்தில்தங்களது காரில் கோவை சென்று கொண்டிருந்தனர்.
நெல்லிக்குப்பம் அருகே அவர்களது காரை 3 போலீஸார் மறித்து நிறுத்தினர். அவர்களிடம் நான் டி.ஆர்.ஓ என்றுகணேசன் கூறியுள்ளார். ஆனால் போலீஸார் அதை ஏற்கவில்லை. பொய் சொல்கிறீர்களா? என்று கேட்டு காரைசோதனையிடத் தொடங்கினர்.
இதனால் கணேசனும், நாகலட்சுமியும் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில் 2 பேரையும் காரிலிருந்துஇறங்குமாறும் போலீஸார் வற்புறுத்தி இறக்கி விட்டுள்ளனர்.
இந்த சமயத்தில் அப்பகுதியில் இருந்தவர்கள், டி.ஆர்.ஓ.வை போலீஸார் தடுத்து நிறுத்தி சாலையில் நிற்கவைத்திருப்பதைப் பார்த்து அங்கு விரைந்து வந்தனர். போலீஸாரிடம் அவர்கள் கடும் வாக்குவாதத்தில்ஈடுபட்டனர், அப்போதுதான் போலீஸாருக்கு "உறைத்துள்ளது". இதையடுத்து தங்களது வாகனத்தில் ஏறி போலீசார்அங்கிருந்து தப்பினர்.
போலீஸாரின் சோதனையால் அதிர்ச்சி அடைந்த நாகலட்சுமிக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்துஅவர் உடனடியாக கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
டி.ஆர்.ஓ. காரை நிறுத்தி சோதனை என்ற பெயரில் அவரை அவமானப்படுத்தியதாகக் கூறி ஏட்டையாக்கள்மாசிலாமணி, கொளஞ்சி, சீதாராமன் ஆகிய மூவரையும் இடமாற்றம் செய்து மாவட்ட காவல்துறைக்கண்காணிப்பாளர் எஸ்.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications