முதன் முதலாய்.. மடத்தை விட்டு வெளியே வந்த ஜெயேந்திரர்

Subscribe to Oneindia Tamil

கலவை:

Jeyandrarஜாமீனில் வெளியில் வந்தது முதல் கலவையில் உள்ள ஆஸ்ரமத்திலேயே முடங்கிக் கிடந்த ஜெயேந்திரர் முதன்முறையாக வெளியேவந்தார்.

கலவையில் உள்ள காஞ்சி மடத்தின் பிருந்தாவனத்தில் தங்கியிருக்கும் ஜெயேந்திரர் நேற்று அந்த கிராமத்தில் தொடங்கப்பட்ட புதியமருத்துவமனைக்குச் சென்றார். அங்கு பொது மக்களுக்கு வழங்கப்படும் இலவச மருத்துவ சேவையை பார்வையிட்டார்.

10 நிமிடங்கள் அங்கிருந்த ஜெயேந்திரர் மடத்துக்குத் திரும்பினார். மெளன விரதம் இருப்பதாகக் கூறப்படுவதால் யாரிடமும் அவர்பேசவில்லை. கையை உயர்த்தி ஆசிர்வாதம் மட்டுமே செய்தார்.

வலிய வரவழைத்த புன்னகையோடு மருத்துவமனையை சுற்றி வந்தார். கலவைக்கு வந்த பின்னர் இரண்டு முறை காஞ்சிபுரம் நீதிமன்றத்துச்சென்ற ஜெயேந்திரர் வேறு எங்குமே போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல ஜெயேந்திரர் மெளன விரதம் இருப்பதாக சொன்னாலும், அவரைச் சந்திக்கும் முக்கியஸ்தர்கள் மற்றும் வழக்குத் தொடர்பாகவிவாதிக்க வருபவர்களிடம் அவர் பேசத் தான் செய்கிறார் என்கிறது போலீஸ் வட்டாரம்.

போலீஸ் ஸ்டேசனில் இளையவர்:

இதற்கிடையே ஜாமீன் நிபந்தனைப்படி நேற்று ஆயிரம் விளக்குக் காவல் நிலையத்தில் விஜயேந்திரர் ஆஜராகி கைநாட்டு வைத்தார்.

சென்னையில் தங்கியுள்ள அவர் காவல் நிலையத்தில் ஆஜராவது இது 3வது முறையாகும்.

ஜெயேந்திரருடன் வந்த அவரது வழக்கறிஞர் தினகர் கூறுகையில், காவல் நிலையத்துக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வரவேண்டியிருப்பதால் பூஜை பணிகள் பாதிக்கப்படுகின்றன. இதனால் இந்த நிபந்தனையை தளர்த்தக் கோரி உயர் நீதிமன்றத்தில் இளையவர்சார்பில் மனு போடப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+