ஜார்க்கண்ட்: காங், பாஜக போட்டா போட்டி
டெல்லி:
ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் பா.ஜ.க.-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வென்றிருந்தாலும் தனித்து ஆட்சியமைக்கபோதிய பலம் இல்லை. இதனால் அங்கு காங்கிரஸ்-ஜார்க்கண்ட் முக்தி மோச்சா- லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா கட்சி கூட்டணிஆட்சியமைக்க முயன்று வருகிறது.
பிகாரில் ஆட்சியமைக்க காங்கிரசின் உதவியை நாடியுள்ள லாலு, ஜார்க்கண்டில் காங்-ஜே.எம்.எம் கூட்டணி ஆட்சியமைக்க உதவப்போவதாக அறிவித்துள்ளார்.
81 இடங்கள் கொண்ட சட்டமன்றதில் ஆட்சியமைக்க 41 இடங்கள் தேவை. இங்கு ஆட்சியில் இருந்த பா.ஜ.க-ஐக்கிய ஜனதா தளம்கூட்டணிக்கு இம்முறை 35 இடங்களே கிடைத்துள்ளது.
காங்கிரஸ்- மத்திய அமைச்சர் சிபு சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோச்சா கூட்டணி 26 இடங்களில் வென்றுள்ளது. லாலு பிரசாதின்ராஷ்ட்ரீய ஜனதா தளம் 7 இடங்களில் வென்றுள்ளது.
பார்வர்ட் பிளாக், கம்யூனிஸ்ட் கட்சிகள், மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், ஜார்க்கண்ட் கட்சி,ஜார்க்கண்ட் மாணவர் கட்சி ஆகியவை கூட்டாக 7 இடங்களில் வென்றுள்ளது. இவர்களது ஆதரவு மற்றும் லாலுவின் ஆதரவுடன்காங்கிரஸ்-ஜே.எம்.எம். கூட்டணி இங்கு ஆட்சியமைக்க முடிவு செய்துள்ளது.
ஆனால், இதனால் 35 இடங்களைப் பிடித்துள்ள பா.ஜ.க., 3 சுயேச்சைகள் மற்றும் காங்கிரஸ் தரப்பில் இருக்கும் சில சிறிய கட்சிகளின்ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைக்க முயன்று வருகிறது.
இன்று இந்தக் கூட்டணியின் தலைவர்கள் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். ஆனால், முதலில் முதல்வர் பதவிக்கானநபரைத் தேர்வு செய்துவிட்டு வருமாறு ஆளுநர் சையத் ராஸி அவர்களை திருப்பி அனுப்பி வைத்துவிட்டார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications