குளிக்கும் போது வேடிக்கை பார்த்த சிறுவர்கள்: மாணவி தற்கொலை
சென்னை:
குளிக்கும்போது 3 சிறுவர்கள் தன்னைப் பார்த்து கேலி செய்ததால் மனமுடைந்த மாணவி தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை பல்லாவரம் நாகல்கேனி பகுதியைச் சேர்ந்தவர் ராணி (வயது 13). இவர் அப்பகுதியில் உள்ள நகராட்சிப் பள்ளியில் 8வதுவகுப்புப் படித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை தனது வீட்டுக்குப் பின்புறம் உள்ள குடிசையால் அமைந்த அறைக்குள் சென்றுகுளித்துள்ளார். அதற்கு மேல் கூரை கிடையாது.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கமீல் (14), பர்னபாஸ், சுரேஷ் (இருவருக்கும் வயது 11) ஆகிய மூன்று சிறுவர்களும் குளியலறையின்மேல் பகுதிவழியாக ராணி குளிப்பதை வேடிக்கை பார்த்துள்ளனர்.
தற்செயலாக நிமிர்ந்த ராணி, மூன்று பேரும் தான் குளிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்து போனார். உடனடியாகதனது வீட்டில் அதுகுறித்துக் கூறியுள்ளார்.
இந்த நிலையில் பள்ளிக்குச் சென்றபோது 3 மாணவர்களும் ராணியைக் கேலி செய்து கிண்டலடித்துள்ளனர். இதனால் கூசிப் போன ராணிவீட்டுக்கு வந்து மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துக் கொண்டார்.
உடனடியாக அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ராணி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் சம்பந்தப்பட்ட 3 சிறுவர்களையும் கைது செய்தனர். அவர்கள் 3 பேரும் புரசைவாக்கம் சிறுவர்சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications