கூலிக்கு ஆள் வைத்து லஞ்சம் வசூல்: பலே பலே அதிகாரிகள்!
கோவை:
கோவையில் சம்பளத்துக்கு ஆள் வைத்து லஞ்சம் வசூலித்த ஆர்.டி.ஓ (வட்டார போக்குவரத்து அலுவலக) அதிகாரிகள் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்சப் பேய் தலைவிரித்து ஆடுகிறது. இந்தப் பேயை அடக்க எத்தனை சாமியார்கள் வந்தாலும் முடியாதநிலை.
கோவை மாவட்டம் வாளையார் தமிழக-கேரள எல்லைப் பகுதியாகும். இங்கு போக்குவரத்து துறையின் 2 சோதனைச் சாவடிகள் உள்ளன.இந்த சோதனைச் சாவடிகளில் பணிபுரியும் அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு ஏராளமான புகார்கள் வந்தன.
இதைத் தொடர்ந்து இங்கு லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். இவர்களைப் பார்த்த போக்குவரத்துத் துறை அதிகாரிகள்அதிர்ச்சியடைந்தனர்.
லஞ்சப் பணத்தை சில அதிகாரிகள் ஜன்னல் வழியாக வீசினர். ஒரு அதிகாரி என்ன செய்வது என தெரியாமல் தன்னிடமிருந்த லஞ்சப்பணத்தை அங்குள்ள கழிவறைக்கு ஓடிச்சென்று பதுக்கி வைத்தார்.
ஆனால் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அலுவலகம் முழுவதும் சோதனை நடத்தி பல இடங்களிலாக மறைத்து வைக்கப்பட்டிருந்த பணத்தைகட்டுக்கட்டாக கைப்பற்றினர்.
இந்தச் சோதனையில் சுமார் ரூ. 35,000 கைப்பற்றப்பட்டது. இதற்கிடையே லஞ்ச ஒழிப்பு போலீஸார் தொடர்ந்து நடத்திய விசாரணையில்,அப்பகுதி வழியே செல்லும் வாகனங்களிடமிருந்து லஞ்சம் வசூலிக்க ஒரு சிலரை அதிகாரிகள் சம்பளத்திற்கு நியமித்திருப்பதுதெரியவந்தது.
இவர்களுக்கு சம்பளமாக தினமும் ரூ. 300 வரை கொடுக்கப்பட்டதாம். இந்தக் கூலிக் கும்பலின் வேலை வாகனங்களை நிறுத்தி லஞ்சத்தைவசூலித்து அதிகாரிகளிடம் கொடுப்பது.
எல்லா வாகனங்களையும் கவர் செய்து லஞ்சம் வசூலிக்க ஊழியர்களால் மட்டும் முடியாது என்பதால் இப்படி தினக் கூலிக்கு ஆட்களைநியமித்து காசு வசூலித்து வந்துள்ளனர் போக்குவரத்துத்துறை அதிகாரிகள்.
இவர்களை என்ன செய்வது?
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications