கருணாநிதியுடன் சோனியா தூதர் போனில் பேச்சு
டெல்லி:
திமுக தலைவர் கருணாநிதியுடன், சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகரான அகமது படேல் தொலைபேசியில் பேசினார்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விவகாரம் தொடர்பாக கருணாநிதியை சமாதானப்படுத்த காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, தனதுதூதராக அகமது படேலை நிநயமித்துள்ளார்.
அவர் சென்னைக்கு நேற்றே வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந் நிலையில் கருணாநிதியுடன் படேல் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
பிகார், ஜார்க்கண்டில் ஆட்சியமைப்பது தொடர்பான பணிகளில் சோனியாவுக்குத் துணையாக அரசியல் நடவடிக்கைகளில்ஈடுபட்டுள்ளதால் தன்னால் உடனடியாக சென்னை வர முடியவில்லை என கருணாநிதியிடம் படேல் கூறியதாகத் தெரிகிறது.
மேலும் இளங்கோவனை அமைச்சரைவயில் இருந்து நீக்குவது குறித்தும் விரைவில் முடிவெடுக்கப்படும் என கருணாநிதியிடம் அவர்தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா டெல்லியில் நிருபர்களிடம் பேசுகையில், கருணாநிதியுடன்படேல் பேச்சு நடத்தியுள்ளார். இந்த விவகாரம் இப்போதைக்கு முடிந்து போன விஷயமாக காங்கிரஸ் கருதுகிறது. இதுதொடர்பாகஜி.கே.வாசனுடனும் படேல் பேசியுள்ளார்.
தற்போது பிகார், ஜார்க்கண்ட், கோவா மாநில பிரச்சினைகளில் காங்கிரஸ் கவனம் செலுத்தி வருவதால், இந்தப் பிரச்சனை குறித்து பின்னர்திமுகவிடன் விரிவாக பேசப்படும்.
இளங்கோவன் மீது நடவடிக்கை எடுப்பதற்கு காலக்கெடு எதையும் திமுக நிர்ணயிக்கவில்லை. எனவே இந்தப் பிரச்சினையில் அவசரம்காட்ட வேண்டிய அவசியம் இல்லை. இதை விட முக்கியப் பிரச்சனைகள் இருப்பதால் இதை இப்போதைக்கு அப்படியே விட்டு விடவேபடேலும் விரும்புகிறார் என்றார் சர்மா.
இதற்கிடையே, இளங்கோவனை மத்திய அமைச்சரவையிலிருந்து நீக்குவதாக பிரதமர் மன்மோகன் சிங்கும், சோனியா காந்தியும்உறுதியளித்துள்ளதாக திமுக தரப்பு கூறுகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications