கோவை சிறையில் மீண்டும் செல்போன் பறிமுதல் !
கோவை:
கோவை மத்திய சிறையில் நடந்த அதிரடி சோதனையில் மீண்டும் செல்போன், சார்ஜர் மற்றும் ரேடியோக்கள்பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் சிலர் செல்போன் மற்றும் ரேடியோக்களைபயன்படுத்துவதாகவும், ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதன்பேரில் சிறைத்துறை அதிகாரிகளும் திடீர் திடீரென சோதனை நடத்தி செல்போன், எப்.எம். ரேடியோக்கள்மற்றும் ஆயுதங்களை கைப்பற்றியும் வருகின்றனர்.
ஆனாலும் இங்குள்ள கைதிகளுக்கு மீண்டும் இவை கிடைத்து விடுகின்றன. இவர்களை பார்க்க வரும்உறவினர்களிடமிருந்து தான் இப்பொருட்கள் கிடைப்பதாக கூறப்படுகிறது.
இதற்கு அங்குள்ள சிறைத்துறை அதிகாரிகளின் பூரண ஒத்துழைப்பும் கிடைப்பதாக கூறப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன் தான் அதிகாரிகள் சோதனை நடத்தி செல்போன்கள், சார்ஜர்கள், எப்.எம்.ரேடியோக்கள், ஸ்குரு டிரைவர்கள் மற்றும் ஆயதங்களை கைப்பற்றினார்கள்.
இந் நிலையில் நள்ளிரவில் சிறைத்துறை டி.ஐ.ஜி. எஸ்ரா தலைமையிலான அதிகாரிகள் சிறையில் திடீர் சோதனைநடத்தினார்கள்.
இதில், மேற்கூரை மற்றும் சுவற்றுக்கு இடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செல்போன், 5 எப்.எம். ரேடியோக்கள்,8 பேட்டரி செல்கள், செல்போன் சார்ஜர், 4 இயர் போன், கத்தரிக்கோல் மற்றும் பொருட்கள் பறிமுதல்செய்யப்பட்டன.
செல்போனை அதிகாரிகள் சோதனையிட்டபோது, அதில் சிம் கார்ட் இல்லை. கைதிகள் பேசி முடித்து விட்டுஉடனடியாக சிம் கார்டுகளை கழட்டி தங்களது அறையிலேயே மறைத்து வைத்து விடுகின்றனர்.
இதன் மூலம், அதிகாரிகள் செல்போனை கைப்பற்றினாலும் அடுத்த முறை செல்போன் கிடைக்கும் போது அந்த சிம்கார்டை பயன்படுத்தினால் பழைய எண்ணிலேயே அவர்களை எளிதில் தொடர்பு கொண்டு பேசலாம்.
இதைத் தடுக்க என்ன செய்வது என தெரியாமல் அதிகாரிகள் விழித்து வருகின்றனர்.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications