வீரப்பன்: ப்ரியாவுக்கு புது பிரச்சினை!
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனை அதிரடிப்படையினர் பொறி வைத்துப் பிடிப்பதற்கு உதவியாக இருந்ததாக கூறப்படும்கோவையைச் சேர்ந்த ப்ரியாவுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக அவரது தந்தை போலீஸில் புகார்கொடுத்துள்ளார்.
கோவையைச் சேர்ந்தவர் ப்ரியா. இவர்தான் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியிடம் நெருங்கிப் பழகி வீரப்பன்நடமாட்டம் குறித்து பல தகவல்களை அதிரடிப்படைக்குக் கொடுத்தவர்.
இந் நிலையில் ப்ரியாவின் தந்தை மருதாச்சலமூர்த்தி கோவை காவல்துறையில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில்,எனது மகள் ப்ரியாவுக்கும், ஊட்டியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்ட்டன.
ஆனால் வரதட்சணைப் பிரச்சினை காரணமாக பாதியிலேயே ஏற்பாடுகள் நின்று விட்டன.
இந் நிலையில் சந்தோஷ் தனது பெற்றோரை சமாதானப்படுத்தி, ப்ரியாவை பதிவுத் திருமணம் செய்து கொண்டார்.ஆனால் அவர்களது திருமண வாழ்க்கை நீண்ட நாள் நீடிக்கவில்லை. இருவரும் விவகாரத்துக்கு கோர்ட்டில்விண்ணப்பித்துள்ளனர்.
அது நிலுவையில் உள்ளது. இந் நிலையில் செந்தில்குமார் என்பவர், தான் ப்ரியாவை பதிவுத் திருமணம் செய்துகொண்டதாகவும், தற்போது பிரிந்து வாழ்வதாகவும், தங்களை சேர்த்து வைக்கக் கோரியும் கோவை குடும்ப நலநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக நான் கோர்ட்டுக்குப் போனபோது, ப்ரியாவின் போட்டோக்களை செய்தியாளர்களிடம்கொடுக்கட்டுமா என்று கேட்டு மிரட்டினார் செந்தில்குமார்.
மேலும், எனது வீட்டிற்கு அடியாட்களை அனுப்பி ப்ரியாவின் சில போட்டோக்களை பறித்துக் கொண்டார்.
நான் கேட்கும் பணத்தைக் கொடுத்து விடுங்கள், இல்லாவிட்டால் தமிழ்த் தீவிரவாதிகளிடம் சொல்லி ப்ரியாவைத்தீர்த்துக் கட்டி விடுவேன் என்று அவர் மிரட்டினார்.
இதேபோல எனது மகள், குடும்பத்தினரையும் அவர் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார் என்றுகூறியுள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் ரேஸ்கோர்ஸ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். செந்தில்குமார்உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து செந்தில்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு செய்துள்ளார்.
அதில், எனது மாமனார் மருதாச்சலமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் கோவை போலீஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர். எனக்கும் சண்முகப் ப்ரியாவுக்கும் (ப்ரியா) கடந்த 2002ம ஆண்டு ஜுலை 19ம் தேதி திருமணம்நடந்தது.
எட்டு மாதம் என்னுடன் குடும்பம் நடத்திய ப்ரியா பின்னர் பிரிந்து சென்று விட்டார் என்று கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி தணிக்சாசலம் செந்தில்குமாருக்கு முன் ஜாமீன் அளித்து உத்தரவிட்டார்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications