பிகார்: லாலு கட்சி ஆட்சியமைக்க காங். ஆதரவு
பிகார்:
பிகாரில் மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவுதெரிவித்துள்ளது.
அங்கு லாலுவின் மனைவி ராப்ரிதேவி மீண்டும் ஆட்சியமைக்க அனுமதிக்கப் போவதில்லை என லோக் ஜன் சக்தியின் தலைவரும் மத்தியஉரத்துறை அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வான் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.
பா.ஜ.க- ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி 93 இடங்களிலும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் 73 இடங்களிலும் வென்றுள்ளன.
லோக் ஜன் சக்தி 29 இடத்திலும், அவருடன் கூட்டணி அமைத்த காங்கிரஸ் 10 இடங்களிலும் மற்ற கட்சிகளும் சுயேச்சைகளும் சுமார் 45இடங்களிலும் வென்றுள்ளன.
இதனால் யாராலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத சூழல் நிலவுகிறது. பா.ஜகவுக்கும் லாலுவுக்கும் ஆதரவைத் தரப் போவதும் இல்லை,பெறப் போவதுமில்லை என அறிவித்துள்ள பாஸ்வான் அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமலாக்கக் கோரி வருகிறார்.
இந் நிலையில் காங்கிரசும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பிகாரில் லாலு பிரசாதின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆட்சியமைக்கஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளன.
காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், மாயாவதியின் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட சிறிய கட்சிகளின் ஆதரவுகிடைத்தாலும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு 93 எம்எல்ஏக்களின் ஆதரவே இருக்கும். ஆட்சியமைக்க மேலும் 28 எம்எல்ஏக்களின் ஆதரவுதேவைப்படும்.
இதனால் பாஸ்வானின் 29 எம்.எல்.ஏக்கள் ஆதரவில்லாமல் லாலுவால் ஆட்சியமைப்பது சிரமமே. அனைத்து சுயேச்சைகளையும்வளைத்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.
இதற்கிடையே லாலு-காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக சட்டசபையில் வாக்களிக்கப் போவதாக பாஸ்வான் இன்று பாட்னாவில் அறிவித்தார்.அதே நேரத்தில் மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகப் போவதில்லை என்றும் கூறினார்.
அவரது கட்சிக்கு 4 எம்.பிக்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே ஆளுநர் பூட்டா சிங் லாலுவுக்கும் காங்கிரசுக்கும் ஆதரவாக செயல்படுவதாகவும் அவர் பதவி விலக வேண்டும் என்றும்பா.ஜ.க. கோரியுள்ளது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications