பட்ஜெட்: 3 மணி நேரம் முச்சு விடாமல்...
சென்னை:
நிதியமைச்சர் பொன்னையன் சுமார் 3 மணி நேரம் பட்ஜெட் உரையை விடாமல் வாசித்து அனைவரையும் அசரவைத்தார்.
தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பொன்னையன் பட்ஜெட் உரையைவாசித்தார்.
11 மணிக்குத் தொடங்கிய அவரது உரை பிற்பகல் 2 மணி வரை நீடித்தது.
சுமார் 3 மணி நேரம் சளைக்காமல் வாசித்த பொன்னையன், இடையில் 3 முறை மட்டுமே தண்ணீர் குடித்தார்.உரைக்கு நடுவே அவ்வப்போது, "மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்" என்றவார்த்தையை உச்சரிக்க அவர் தவறவில்லை.
பிற்பகல் 1.30 ஆனபோது சட்டசபையில் இருந்த கடிகாரத்தில் ஒரு பெல் அடித்தது. இதைக் கேட்டதும் சட்டென்றுநிமிர்ந்து என்ன சப்தம் என்று பார்த்தார் பொன்னையன். அது கடிகார மணி சப்தம்தான் என்று சபாநாயகர்காளிமுத்து சிரித்துக் கொண்டே கூறவும், முதல்வர் உள்பட அனைவரும் புன்னகைத்தார்கள்.
பொன்னையனும், 1.30 ஆகி விட்டதோ என்று சிரித்துக் கொண்டே கூறி உரையைத் தொடர்ந்தார்.
உரையை வாசித்து முடித்தவுடன், முதல்வர் ஜெயலலிதா எழுந்து, பொன்னையனை வெகுவாகப் பாராட்டினார்.வாசித்து முடித்து, வாய் வலித்துப் போயிருந்த பொன்னையனுக்கு அது நிச்சயம் சந்தோஷத்தைக் கொடுத்திருக்கும்!
பட்ஜெட் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அதிமுக உறுப்பினர் ஜியாவூதின் அணிந்திருந்த அரபு ஷேக்உடையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அரபு நாட்டு ஷேக்குகள் அணிவதைப் போன்ற தலைப்பாகை, நீள அங்கியுடன் ஜியாவூதின் வந்திருந்தார். அவரைசந்தேகத்துடன் பார்த்து அவைக் காவலர்கள் தடுத்து நிறுத்தினர்.
அவர்களிடம், நான் எம்.எல்.ஏதான், அதிமுக எம்.எல்.ஏ.. ஹஜ் யாத்திரையில் இருந்து வந்ததால் இந்த உடையில்வந்தேன் என்று விளக்கமளித்தார் ஜியாவுதீன். அதன் பிறகே அவர் உள்ளே அனுமதிக்கப்பட்டார்.
ஜியாவுதீனை அனைத்து உறுப்பினர்களும் வித்தியாசமாக பார்த்தனர். கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டுவெளியே வந்த ஜியாவுதீனை நிருபர்கள் நிறுத்தி இது என்ன புது டிரஸ் என்று கேட்டபோது, ஹஜ் யாத்திரைசென்றிருந்தேன். யாத்திரைக்குப் பின் அரபு உடையில் வந்தால் வளம் கொழிக்கும் என்பார்கள்.
தமிழகத்திலும் வளம் கொழிக்க வேண்டும் என்பதற்காக சட்டசபைக்கு இதே உடையில் வந்தேன் என்றார்ஜியாவுதீன்.
அப்படி போடுங்க பாய்..!
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications