என்னை சோனியா ராஜினாமா செய்ய சொல்லவில்லை: இளங்கோவன்
டெல்லி:
அமைச்சர் பதவியில் இருந்து என்னை சோனியா காந்தி ராஜினாமா செய்யச் சொல்லவில்லை என்று மத்திய வர்த்தகத்துறைஇணையமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரை ஒட்டுமொத்தமாக கேவலமாகப் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார் இளங்கோவன். அவர் மீது காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுகவலியுறுத்தியுள்ளது.
தனது அமைச்சர் பதவியை இளங்கோவன் ராஜினாமா செய்யக் கூடும் என்று கூறப்படுகிறது.
இந் நிலையில் இளங்கோவன் கூறுகையில், நான் ராஜினாமா செய்ய மாட்டேன், அப்படிச் செய்யமாறு சோனியா காந்தியும்என்னிடம் கூறவில்லை.
சென்னையில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் நான் என்ன பேசினேன் என்பது குறித்து சோனியா காந்தியிடம் விளக்கிவிட்டேன்.
திமுகவின் தீர்மானம் குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. திமுகவின் நலனுக்காக எனது பதவியை ராஜினாமா செய்யகட்சி மேலிடம் எனக்கு உத்தரவிடுமா என்பதற்கெல்லாம் நான் பதில் சொல்லத் தயாரில்லை.
எனக்கும், திமுக தலைவர் கருணாநிதிக்கும் இடையே மோதலை உருவாக்க சில சக்திகள் முயல்கின்றன என்று நான்சந்தேகிக்கிறேன். அந்த சக்திகள் நிச்சயம் திமுகவில் இருக்காது என்றும் நம்புகிறேன்.
கருணாநிதியின் ஜாதி குறித்து நான் எதுவும் பேசவில்லை. அதேபோல எனது தந்தை ஈ.வி.கே.சம்பத்தை கருணாநிதி தாக்கமுயன்றார் என்றும் பேசவில்லை. மொத்தத்தில் அந்தக் கூட்டத்தில் நான் பேசியவற்றை, தவறான முறையில் யாரோ சிலர்(காங்கிரஸ் எம்பி அல்லது எம்எல்ஏக்கள்) திரித்து கருணாநிதியிடம் கூறியுள்ளனர்
அதனால் தான் இவ்வளவு குழப்பம் என்றார் இளங்கோவன்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications