இந்தோனேஷியாவை ஆட்டும் மூட நம்பிக்கைகள் !
பஞ்சார்பன்டி: (இந்தோனேஷியா)
இந்தோனேஷியாவிலுள்ள பாலி பகுதியில் திடீரென சில கோவில்களில் சிறு சிறு அடையாளக் குறியீடுகள்தோன்றியதை தொடர்ந்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மீண்டும் சுனாமி போல ஏதும் அசம்பாவிதம்நேருமோ என்று பொதுமக்கள் மத்தியில் பீதி பரவியுள்ளது.
கடந்த டிசம்பர் 26-ந்தேதி உலகையே உலுக்கிய சுனாமி பீதியிலிருந்து இந்தோனேஷிய மக்கள் இன்னும்மீளவில்லை. இங்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக இறந்தனர்.
அடுத்த சுனாமி எப்போது வருமோ என்ற அச்சத்தில் தான் இங்குள்ள மக்கள் இப்போதும் உள்ளனர்.
இதற்கிடையே இங்கு பல பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் நில நடுக்கம் மக்களை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.
அடிக்கடி ஏற்படும் இயற்கை பேரழிவுகளால் இங்கு தற்போது மக்களிடையே மூட நம்பிக்கைகளும் அதிகரித்துவருகின்றன.
இங்குள்ள பாலி பகுதியில் ஏராளமான இந்து கோவில்கள் உள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன் சிலகோவில்களில் வெள்ளை நிறத்தில் சிறு சிறு கோடுகள் தோன்றியுள்ளன.
முதலில் இதை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் நாட்கள் செல்லச்செல்ல பல கோவில்களில் இதுபோன்றவெள்ளை நிற குறியீடுகள் தோன்றத் தொடங்கியதால் பொது மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வுஏற்பட்டுள்ளது.
சாக்பீசால் போடப்பட்டுள்ள இந்தக் குறியீடுகளை யாரோ விஷமிகள் தான் போட்டிருக்க வேண்டும் என போலீசார்கூறினாலும், மீண்டும் ஏதேனும் இயற்கை சீற்றம் ஏற்படுவதற்கான அறிகுறி தான் இது என்று மக்களிடையேகிலியை பரப்பிவிட்டு வருகின்றனர் சிலர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்பகுதியில் திடீர் திடீரென மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாம். நாய்களும்வித்தியாசமாக ஊளையிட்டதாம்.
இவற்றையெல்லாம் சேர்த்து கூட்டிக்கழித்து பார்த்த இப்பகுதி மக்கள், ஏதோ அபாயத்துக்கான அறிகுறி தான் இதுஎன்று முடிவு செய்து விட்டனர்.
இதனால் சிலர் இங்குள்ள கோவில்களுக்கு சென்று சிறப்பு பூஜைகளை நடத்தி வருகின்றனர்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications