ஜெயலட்சுமி வழக்கு: 4ம் தேதி விசாரணை அறிக்கை
மதுரை:
ஜெயலட்சுமி தொடர்பான வழக்கில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இன்று இறுதி விசாரணை அறிக்கை தாக்கல்செய்யப்படவில்லை. வரும் வெள்ளிக்கிழமை அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.
ஏட்டு முதல் எஸ்.பி. வரை 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மீது செக்ஸ் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு புகார்களைக்கூறினார் ஜெயலட்சுமி.
அதேபோல, ஜெயலட்சுமியால் குற்றம் சாட்டப்பட்ட சில போலீஸார், ஜெயலட்சுமிக்கு 80க்கும் மேற்பட்ட போலீஸாருடன்தொடர்பு இருந்ததாகவும், அவர்களிடம், பணம், நகைகளை ஜெயலட்சுமி மோசடி செய்ததாகவும் பதிலுக்குப் புகார் தெரிவித்தனர்.
இந்தப் புகார்கள் குறித்து சிபிஐ அதிகாரி சிவாஜி தலைமையிலான குழு விசாரணை நடத்தி வந்தது. 3 மாதங்களுக்கு முன்புஇடைக்கால அறிக்கையை சிபிஐ மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்தது.
இன்று இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில்இன்று பெரும் பரபரப்பு நிலவியது. ஆனால் எதிர்பார்த்தபடி இறுதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை
சிபிஐ வழக்கறிஞர் டேணியல், நீதிபதியை அவரது அறையில் சந்தித்து சில நிமிடங்கள் தனியாக ஆலோசனை நடத்தினார்.இதையடுத்து வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அறிக்கை தாக்கல் செய்ய வெள்ளிக்கிழமை வரை கால அவகாசம் உள்ளது என்று மட்டும் கூறிச் சென்றார்.
எனவே வெள்ளிக்கிழமை ஜெயலட்சுமி வழக்கு தொடர்பான இறுதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications