உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் பற்றாக்குறை!
சென்னை:
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.கனகராஜ் ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற நீதிபதிகளின்எண்ணிக்கை 25 ஆக குறைந்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 42 ஆகும். ஆனால் 26 நீதிபதிகள்தான் இருந்துவந்தனர். இதனால் வழக்கு விசாரணை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நீதிபதி கனகராஜ் செவ்வாய்க்கிழமை ஓய்வு பெற்றார். இதனால் நீதிபதிகளின் எண்ணிக்கை 25 ஆககுறைந்து விட்டது. இதன் காரணமாக உயர்நீதிமன்றத்தில் புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மதுரையில் அமைக்கப்பட்டுள்ள உயர்நீதிமன்றக் கிளையில் 9 நீதிபதிகள் வரை நியமிக்கலாம். ஆனால் நீதிபதிகள்பற்றாக்குறை காரணமாக 5 பேர்தான் தற்போது அங்கு உள்ளனர். அவர்களும் கூட சுழற்சி முறையில்தான்நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தொடர்ந்து நீதிபதிகள் ஓய்வு பெற்று வருவதால் வழக்குகள் அதிக அளவில் தேங்கும் அபாயம்ஏற்பட்டுள்ளது. உடனடியாக புதிய நீதிபதிகள், முழுமையான அளவுக்கு நியமிக்கப்பட்டால் மட்டுமே வழக்குகள்பெருமளவில் தேங்குவதைத் தடுக்க முடியும் என்று உயர் நீதிமன்ற வட்டாரத்தில் கூறப்படுகிறது.
நீதிபதி கனகராஜ், 1997ம் ஆண்டு உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் 1999ம் ஆண்டுநிரந்தர நீதிபதியாக அறிவிக்கப்பட்டார்.
சமீபத்தில் தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு தொடர்பாக தமிழக அரசைக் கடுமையாக எச்சரித்து அந்த வழக்கைஉடனடியாக தொடங்க உத்தரவிட்டவர் கனகராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications