பூட்டுக்கே பூட்டு போட்ட காங் கோஷ்டிகள்!
புதுவை:
புதுவை காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள கோஷ்டிப் பூசல் உச்சகட்டத்தை எட்டியுளது. கண்ணன் கோஷ்டியினரின்செயல்பாடுகளால் ஆவேசமடைந்துள்ள முதல்வர் ரங்கசாமி டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அடிக்கடி கட்சி மாறும் நோய் கொண்ட கண்ணன், இப்போது காங்கிரஸில் உள்ளார். சமீப காலமாக முதல்வர்ரங்கசாமியை குறி வைத்து செயல்பட்டு வருகிறார். ரங்கசாமிக்கு எதிராக தொடர்ந்து புகார்களைக் கூறி வருகிறார்.அவரது ஆதரவு அமைச்சரான லட்சுமி நாராயணனும் முதல்வருக்கு எதிராக அவ்வப்போது பேட்டி கொடுத்துவருகிறார்.
இந்த நிலையில், ரங்கசாமிக்கு எதிராக 5ம் தேதி புதுவையில் மாபெரும் போராட்டம் நடத்தப் போவதாக கண்ணன்அறிவித்திருந்தார். அதுதொடர்பான விளம்பரம் முத்தியால்பேட்டை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் சுவரிலேயேவரையப்பட்டிருந்தது. இது ரங்கசாமியின் ஆதரவாளர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து கண்ணன் போராட்டம் நடத்தவுள்ள அதே இடத்தில், அதே நாளில், அதே நேரத்தில் அரசின்சாதனைகளை விளக்கி பொதுக் கூட்டம் நடத்தவும் ரங்கசாமியின் ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்த கோஷ்டி சண்டையில் முத்தியால்பேட்டை காங்கிரஸ் அலுவலக வெளிக் கதவுக்கு கண்ணன் கோஷ்டிதிண்டுக்கல் பூட்டு வாங்கி வந்து போட்டது. பதிலுக்கு முதல்வர் ரங்கசாமி கோஷ்டி கோத்ரேஜ் பூட்டு வாங்கிமாட்டிவிட்டது.
விடுமா கண்ணன் கோஷ்டி, ரங்கசாமி போட்ட கோத்ரேஜ் பூட்டை திறக்கவே முடியாத மாதிரி, அதன் மீதே ஒருபூட்டு போட்டுவிட்டது.
பதிலுக்கு ரங்கசாமியும் கண்ணனின் பூட்டுக்கு ஒரு பூட்டு போட்டார்.
மொத்தத்தில் கதவை உடைத்தால் மட்டுமே காங்கிரஸ் அலுவலகத்துக்குள் போக முடியும் என்ற நிலை.
கண்ணனின் செயல்பாடுகள் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்க, அதைத் தட்டிக் கேட்க வேண்டிய மாநிலகாங்கிரஸ் தலைவர் நாராயணசாமி மெளனமாக இந்த சண்டையை என்ஜாய் பண்ணிக் கொண்டிருக்கிறார்.
இதனால் பிரச்சினையில் சோனியா காந்தி தலையிடக் கோருவதைத் தவிர வேறு வழியில்லை என்று கருதியரங்கசாமி, டெல்லிக்கு பிளேன் ஏறிவிட்டார். கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க அவர் கோரவுள்ளதாக தெரிகிறது.
-
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்!












Click it and Unblock the Notifications