குடி நீர் திட்டம்: ப.சி மீது ஜெ. கடும் தாக்கு
சென்னை:
மத்திய அரசு நிதி ஒதுக்காவிட்டாலும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியே தீரும்என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
நிதியமைச்சர் சிதம்பரம், சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ரூ. 1,000 கோடி செலவிலான கடல் நீரை குடிநீராகமாற்றும் திட்டம் தமிழக அரசால் தான் தாமதமாவதாக புகார் கூறியுள்ளார்.
இந்த திட்டத்திற்கான ஒப்பந்ததாரரை மாநில அரசு தேர்வு செய்துவிட்டதா என்ற தகவலுக்காக மத்திய அரசு25.2.2005 வரை காத்திருந்ததாகவும், தகவல் எதுவும் கிடைக்காத காரணத்தால் இத்திட்டத்திற்கு மத்தியபட்ஜெட்டில் அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தண்ணீர் மாநில அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால் இது பற்றி மாநில அரசை கலந்தாலோசிக்கவேண்டியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறாக ப.சிதம்பரம் இத்திட்டம் பற்றிய உண்மை விவரங்களுக்கு கிஞ்சித்தும் மதிப்பளிக்காமல் கருத்துதெரிவித்துள்ளார். அவரது இந்த மனப்பான்மை மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.
கடந்த வருடம் தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கையில் இது பற்றி ஆரவாரமாக அறிவிக்கும்போது மட்டும்மாநில அரசை அவர் ஏன் கலந்தாலோசிக்கவில்லை ?
இந்த நிலையில் இதுபற்றிய உண்மை நிலையை தெரிவிப்பது அவசியமாகிறது.
தமிழக அரசு நாள் ஒன்றுக்கு 300 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டத்தை செயல்படுத்தும்நோக்கத்தை 2.5.2003 அன்றே அறிவித்து விட்டது. ப.சிதம்பரம் அப்போது அதில் சம்பந்தட்டிருக்கவே இல்லை.
அப்போது மத்திய அரசுக்கு இதில் எந்த தொடர்பும் இருக்கவில்லை. 2.5.2003 அன்று இத் திட்டத்திற்கானடெண்டர் கோரப்பட்டது.
டெண்டர் போட்ட ஒரு நிறுவனம் இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உயர் நீதிமன்றமும்தடையாணை பிறப்பித்தது. முடிவாக 2004 அக்டோபரில் தான் தமிழக அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.
அதன் பிறகு மாநில அரசு 2004 நவம்பரில் மீண்டும் டெண்டர் கோரியது. இதில் எந்த கால தாமதமும்ஏற்படவில்லை.
இத் திட்டத்தை செயல்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், ப.சிதம்பரம் இதற்கு ஒத்துழைப்புஅளிக்காமல் இந்த திட்டத்தை தனதாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இத் திட்டத்திற்கு நிதியுதவி அளிக்குமாறு 2004 டிசம்பரில் எனது அரசு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. அதன்அடிப்படையில் சிதம்பரம் நிதி ஒதுக்கியிருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.
இத் திட்டத்தை செயல்படுத்த மாநில அரசுக்கு சட்டபூர்வமான தகுதி உள்ளது. எனவே மத்திய அரசு நிதிஒதுக்காவிட்டாலும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியே தீரும் என்று ஜெயலலிதாகூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications