இ-மெயில் மூலம் மோசடி செக்ஸ் வலை: பாடகர் மனோவின் மகன் கைது
சென்னை:
பெண்களின் பெயரில் இ-மெயில் அனுப்பி, ஆண்களை செக்சுக்கு வரவழைத்து, அவர்களிடம் பணம் பறித்து வந்த பிரபலபின்னணிப் பாடகர் மனோவின் மகனும் அவரது 5 நண்பர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர் லோகேஷ் என்பவருக்கு ஒரு பெண்ணின் பெயரில் இ-மெயில் வந்தது. குறிப்பிட்டஒரு நட்சத்திர ஹோட்டலைச் சொல்லி அங்கு வருமாறு அவரை அழைத்துள்ளனர்.
இதையடுத்து அந்த மெயில் ஐடிக்கு தனது செல்போன் எண்ணைத் தந்துள்ளார் லோகேஷ்.
இதைத் தொடர்ந்து செல்போனில் பேசிய ஆண், லோகேஷை நட்சத்திர ஹோட்டல் வாசலுக்கு வந்துவிடும்படி கூறியுள்ளார்.
புரோக்கர் வைத்து இன்டர்நெட்-செல்போன் மூலம் செக்சுக்கு அழைக்கும் பெண் என்ற நம்பிக்கையில், ஜொள்ளு விட்டபடிலோகேஷும் கிளம்பிச் சென்றார்.
ஹோட்டல் வாசலில் 5 வாலிபர்கள் இருந்தனர். வளசரவாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் அந்தப் பெண் இருக்கிறாள் என்று சொல்லிமாருதி காரில் அழைத்துச் சென்றுள்ளனர்.
வழியில் லோகேஷின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய அவர்கள் அவர் வைத்திருந்த பணம் (பெண்ணை அனுபவிக்க எடுத்துவந்தது) நகைகள், வாட்ச் என அனைத்தையும் பறித்துக் கொண்டு இறக்கிவிட்டுச் சென்றனர்.
இதுகுறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் லோகேஷ்.
இதையடுத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். செல்போனில் லோகேசுடன் அந்தக் கும்பல் பேசியிருந்ததால், அதைவைத்து அக் கும்பல் அடையாளம் காணப்பட்டது.
போலீஸ் வேட்டையில் பாண்டிச்சேரி வில்லியனூரைச் சேர்ந்த ஹரி என்பவர் முதலில் பிடிபட்டார். இவரும் ஒரு சாப்ட்வேர்என்ஜினியர் தான். இவர் கொடுத்த தகவலின் பேரில் பாடகர் மனோவின் மகன் ஷகீர், சாவன் சுதாகர், ராமாபுரம் மனோகர்,வண்டலூர் விஜய் பிரேம் ஆகியோர் பிடிபட்டனர்.
இவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, பெண்களின் பெயரில் இ-மெயில்களை அனுப்பியும், சேட்டிங் செய்தும்ஆண்களுக்கு இந்த ஐந்து பேரும் வலை விரித்துள்ளனர்.
ஆசையுடன் வருகிறவர்களை அடித்தும், மிரட்டியும், பணத்தைப் பறித்துக் கொண்டு அனுப்பி விடுவது இவர்களது வாடிக்கை.
25 ஆண்கள் இவர்களிடம் இதுவரை ஏமாந்துள்ளனர். இதேபோல பெண்களுக்கும், ஆண்கள் பெயரில் இ-மெயில் அனுப்பியும்,தொலைபேசி எண்ணைத் தெரிந்து கொண்டு போன் செய்தும் பேசி மிரட்டியும் பணம் பறித்துள்ளனர்.
குறிப்பாக ஹை-டெக் கால்கேர்ள்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வலை வீசியே இந்தக் கும்பல் பணம் பறித்துள்ளது.கூடவே செக்ஸ்ரீதியில் அவர்களை துன்புறுத்தியும் உள்ளனர்.
சமீபத்தில் பெங்களூரைச் சேர்ந்த இரு திபெத் பெண்களை சென்னைக்கு செக்ஸ் கம்பெனி தர என்று சொல்லி வர வைத்துஉடல்ரீதியில் அவர்களை டார்ச்சர் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
இதுவரை ரூ. 10 லட்சம் வரை இந்தக் கும்பல் பணம் பறித்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இவர்களிடமிருந்து கார், மோட்டார் சைக்கிள்கள், 17 செல்போன்கள், 18 பவுன் நகைகள் உள்ளிட்டவை பறிமுதல்செய்யப்பட்டுள்ளன.
கார்களில் சுற்றி காதல் வலை வீசியும் சில நல்ல குடும்பத்துப் பெண்கள், கல்லூரி மாணவிளையும் வளைத்து அவர்களுக்கு மயக்கமருந்து கொடுத்து உடலுறவு கொண்டு, அதை படம் எடுத்து வைத்துக் கொண்டும் மிரட்டியும் இக் கும்பல் பணம் பறித்துவந்துள்ளது.
பிடிபட்டவர்களில் ஒருவன் பாடகர் மனோவின் மகன் என்பதால் போலீசாருக்கே அதிர்ச்சி ஏற்பட்டது. அதே போலஇன்னொருவன் மிஸ் செளத் இண்டியாவாகத் தேர்வான ஒரு பெண்ணின் சகோதரன் ஆவான்.
எல்லோருமே வசதியான வீட்டுப் பிள்ளைகள் தான்.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications