காளிமுத்துவுக்கு எதிர்ப்பு: சட்டசபையில் திமுக, பாமக வெளிநடப்பு
சென்னை :
சபாநாயகர் காளிமுத்துவின் பாரபட்சப் போக்கைக் கண்டித்து சட்டசபையிலிருந்து திமுக மற்றும் பாமக, காங்கிரஸ்உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. அப்போது விவாதத்தில் கலந்து கொண்டு திமுகஉறுப்பினர் பொன்முடி பேசுகையில், ரேஷன் கார்டு விஷயத்தில் அதிமுக அரசு அடிக்கடி தனது கொள்கையைமாற்றிக்கொள்கிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக குழம்பிப் போயிருக்கிறார்கள் என்றார்.
அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, கொள்கையை மாற்றிக் கொள்வது அதிமுகவுக்குப் பழக்கமானதல்ல.அது திமுகவின் கொள்கை. கடந்த கால திமுக ஆட்சியின் அலங்கோலங்களைப் பார்த்தாலே அது தெளிவாகும்என்றார்.
இதைத் தொடர்ந்து துரைருகன் எழுந்து ஜெயலலிதாவின் குற்றச்சாட்டுக்குப் பதில் அளித்தார். ஆனால் அவரதுபேச்சை அவைக் குறிப்பிலிருந்து நீக்குவதாக காளிமுத்து அறிவித்தார்.
இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது எழுந்த திமுக தலைவர் அன்பழகன்,"முதல்வர் ஒரு குற்றச்சாட்டைக் கூறினார். அதற்கு துரைமுருகன் பதில் அளித்தார். அதை அவைக் குறிப்பிலிருந்துநீக்குவது நியாயமற்றசெயல் என்றார்.
ஆனால் அன்பழகனின் கோரிக்கையை சபாநாயகர் காளிமுத்து ஏற்கவில்லை. இதையடுத்து சபாநாயகரைகண்டித்து வெளிநடப்புச் செய்வதாக திமுகவினர் அறிவித்து விட்டு வெளியேறினர். அவர்களைத் தொடர்ந்துபாமகவினரும் வெளிநடப்புச் செய்து வெளியேறினர்.
இதைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர் குமாரதாஸ் எழுந்து ப.சிதம்பரம் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் குறித்துப்பேசினார். அப்போது குறுக்கிட்ட முதல்வர், ப.சிதம்பரம் குறித்து சில கருத்துக்களைத் தெரிவித்தார். இதற்குகாங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
குமாரதாஸ் மற்றும் முதல்வர் பேசியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்குமாறு சபாநாயகருக்கு அவர்கள் கோரிக்கைவிடுத்தனர். ஆனால் அதை காளிமுத்து ஏற்கவில்லை. இதையடுத்து காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளிநடப்புச்செய்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications