திமுகவுக்கு எதிராக காங்கிரஸ் போஸ்டர் யுத்தம்!
சென்னை :
கூட்டணி ஆட்சி விவகாரம் தொடர்பாக கருணாநிதியைக் கண்டித்தும், இளங்கோவனுக்கு எதிரான திமுகவின்தீர்மானத்தை கடுமையாக சாடியும் சென்னை நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டள்ளன.
இதை யார் ஒட்டியது யார் என்று தெரியவில்லை. இருப்பினும் இளங்கோவன் கோஷ்டியைச் சேர்ந்த காங்கிரஸ்கட்சியினரே இதை ஒட்டியுள்ளதாக மற்ற காங்கிரஸ் கோஷ்டிகள் கூறுகின்றன.
ஆனால், தனது பெயரைக் கெடுக்கவும் திமுகவுடன் மோதலை தீவிரப்படுத்தவும் வேறு யாரோ தான் இதைஒட்டியுள்ளார்கள் என இளங்கோவன் தரப்பு கூறுகிறது.
கிளம்பியது இன்னொரு குரல்:
இந் நிலையில் பழம்பெரும் காங்கிரஸ் தலைவரான எம்.பி. சுப்பிரமணியம் கூட்டணி ஆட்சிக்கு ஆதரவாகக் குரல்கொடுத்துள்ளார்.
நீண்ட காலமாக கட்சியின் செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கியே இருக்கும் சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம்பேசுகையில்,
மத்தியில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சிதான் நடந்து வருகிறது. அதேபோல, கேரளா, மகாராஷ்டிரா,கர்நாடகமா, ஒரிஸ்ஸா ஆகிய மாநலங்களிலும் கூட்டணி ஆட்சிதான்.
தமிழகத்தைப் பொருத்தவரை இதுவரை 3 கட்சிகள்தான் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்தியுள்ளன.அவை திமுக, அதிமுக மற்றும் காங்கிரஸ்.
காங்கிரஸ் ஆட்சியைப் பறி கொடுத்து 30 ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஆனாலும், காங்கிரஸ் கட்சியின் ஆதரவைவைத்துத்தான் திமுகவும், அதிமுகவும் பெரும்பான்மை பலத்தைப் பெற்று வந்துள்ளன. இதுதான் உண்மை. இதையாரும் மறுக்க முடியாது.
வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க மட்டும் காங்கிரஸ் தேவை, ஆனால் ஆட்சியில் பங்கு தர முடியாது என்றுகூறுவதா என்று தொண்டர்கள் கேட்கிறார்கள்.
கூட்டணி ஆட்சி வந்தால், சர்வாதிகாரப் போக்குடன் நடக்க முடியாது,தனது இஷ்டத்திற்கு ஆட்டம் போடமுடியாது என்பதால்தான் அதை எதிர்க்கிறார்கள்.
ஆனால் கூட்டணி ஆட்சி வந்தால் ஊழல் குறையும், அரசு நிர்வாகம் சிறப்பாக அமையும். இதைத்தான் மக்களும்விரும்புகிறார்கள். எதிர்காலத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும். இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள்கூட்டணி ஆட்சிதான் வரப் போகிறது.
தமிழகத்தில் அந்த விவாதம் இப்போது தொடங்கி விட்டது. இது நல்லதுதான். இந்த விவாதம் தீவிரமடைந்துதொடர வேண்டும். மக்கள் மனதில் நிச்சயம் இதுதொடர்பாக தீவிர யோசனை எழுந்துள்ளது.
எதிர்காலத்தில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு ஒத்துக் கொள்ளும் கட்சியுடன்தான் காங்கிரஸ் கட்சி கூட்டணிவைத்துக் கொள்ள வேண்டும். இது எனது தனிப்பட்ட கருத்து என்றார் எம்.பி.சுப்பிரமணியம்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications