சென்னையின் பிரபல ரெளடி "பங்க்" குமார் கைது
சென்னை:
சென்னையைச் சேர்ந்த பயங்கர ரெளடியான பங்க் குமார் திடீரென கைது செய்யப்பட்டான்.
ஏராளமான கொலை, கொலை மிரட்டல், கடத்தல், பணம் பறித்தல், அடிதடி வழக்குகளில் தொடர்புடையவன் பங்க் குமார். 3 முறை குண்டர்சட்டத்திலும் கைது செய்யப்பட்டு சிறை வாசம் அனுபவித்தவன்.
இப்போது பாமகவில் இருக்கும் இவன், அடுத்தடுத்து வந்த அதிமுக, திமுக ஆட்சியில் முக்கிய புள்ளிகளை கவனிக்கும் விதத்தில் கவனித்துவந்ததால் எண்கெளன்டர் போன்றவற்றில் இருந்து தப்பி வருகிறான்.
தி.நகர் பாண்டி பஜார் அருகே குடிசைகளில் வசிப்போரை அங்கிருந்து காலி செய்யுமாறு கூறி பங்க் குமார் மிரட்டி வந்துள்ளான். ஒருதொழிலதிபரிடம் காசு வாங்கிக் கொண்டு இந்த வேலையை அவன் செய்தான்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர்.
இந் நிலையில் வியாழக்கிழமை இரவு குடிசைப் பகுதிகளுக்கு வந்த குமார், அங்கிருந்தவர்களை மிரட்டி, உடனே காலி செய்யாவிட்டால்ஒருவரையும் உயிருடன் விட மாட்டேன் என்று எச்சரித்தான்.
இதையடுத்து அவனுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் திரண்டனர்.
நிலைமை கை மீறிப் போனதையடுத்து மாம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் குமார் தலைமையிலான போலீஸ் படை விரைந்துவந்தது. போலீஸாரைப் பார்த்ததும் பங்க் குமார் ஓட முயன்றான். ஆனால் போலீஸார் அவனை அமுக்கிப் பிடித்தனர்.
அவனைப் பிடிக்க முயன்றபோது இன்ஸ்பெக்டர் மோகன் குமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications