ஜார்க்கண்ட்: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு
டெல்லி:
ஜார்க்கண்ட் மற்றும் கோவா ஆளுநர்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தேசிய ஐனநாயகக் கூட்டணிஎம்.பிக்கள் கூச்சல் எழுப்பியதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று ஒத்தி வைக்கப்பட்டன.
பாஜக தலைவர் அத்வானி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில் முன்னாள் பாஜக தலைவர் வெங்கையா நாயுடு, பாஜக மூத்த தலைவர்கள் சுஷ்மா ஸ்வராஜ், பிரமோத் மகாஜன், திரிபாதி, முன்னாள்மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சுமார் 30 நிமிடம் இந்தக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை பாஜக துணைத் தலைவர்மல்ஹோத்ரா,
ஜார்க்கண்ட் மற்றும் கோவாவில் ஆளுநர்களின் செயல்பாடுகளை எதிர்த்து நாங்கள் நடத்திய போராட்டங்களை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இரு மாநில ஆளுநர்களும் திரும்பப் பெறப்பட வேண்டும்.
புதிய ஆளுநர்களை நியமித்து முந்தைய ஆளுநர்களின் நடவடிக்கைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை மத்திய அரசுநிறைவேற்றாவிட்டால், நாடாளுமன்றத்தை நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார்.
பின்னர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் மல்ஹோத்ரா இருவரும் மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியை சந்தித்து தேசியஜனநாயகக் கூட்டணியின் முடிவைத் தெரிவித்தனர்.
இரு அவைகளும் ஒத்திவைப்பு:
அதேபோல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி எம்.பிக்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்திகோஷம் எழுப்பினர். இதனால் அவைகளில் கூச்சல், குழப்பம் நிலவியது.
இதையடுத்து இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
கலாம்-ஜார்க்கண்ட் ஆளுநர் சந்திப்பு:
இதற்கிடையே குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை ஜார்க்கண்ட் ஆளுநர் சையத் ராஸி இன்று சந்தித்துப் பேசினார். பின்னர்செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஜார்க்கண்ட் நிலவரத்தை கலாமிடம் எடுத்துக் கூறினேன். ஜார்க்கண்ட் முதல்வராகப் பதவியேற்றிருக்கும் சிபு சோரன்,தனது பெரும்பான்மையை வரும் 21ம் தேதிக்கு முன்னதாகவே நிரூபிக்க வேண்டும்.
எந்தத் தேதியில் நிரூபிக்க வேண்டும் என்பதை பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ஆகியோருடன்கலந்து ஆலோசித்த பின்பு அறிவிப்பேன் என்று கூறினார்.
-
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications