ஆட்சியமைக்க உரிமை கோரினார் ராப்ரி தேவி
பாட்னா:
எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் பீகாரில் ஆட்சியமைக்க ரப்ரி தேவி இன்று உரிமைகோரினார்.
பீகாரில் இம்முறையும் ஆட்சியமைக்க எந்த சிக்கலும் இருக்காது என்று லாலு கருதியிருந்தார். ஆனால் தேர்தல்முடிவுகள் அவரது திட்டத்தை தவிடு பொடியாக்கியது.
243 உறுப்பினர்களைக் கொண்ட பீகாரில் ஆட்சியமைக்க வேண்டுமானால் குறைந்தது 122 எம்.எல்.ஏ.க்களின்ஆதரவு தேவை. அதிகபட்சமாக லாலு கட்சிக்கு 75 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். காங்கிரஸ் மற்றும் சுயேச்சைகளைசேர்த்தால் 86 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவே லாலுவுக்கு கிடைக்கும் .
பாரதிய ஜனதா கூட்டணியில் பாஜகவுக்கு 37 எம்.எல்.ஏ.க்களும், ஐக்கிய ஜனதா தளத்துக்கு 55 எம்.எல்.ஏ.க்களும்உள்ளனர். ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்திக்கு 29 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். இது தவிர 17சுயேச்சைகளும் உள்ளனர்.
இதனால் எந்தக் கூட்டணியும் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் எப்படியும்ஆட்சிக்கட்டிலில் ஏறியே தீருவது என்ற முடிவில் லாலு உள்ளார். இந் நிலையில் ராப்ரி தேவி இன்று ஆளுநரைசந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
அவருடன் லாலு பிரசாத் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளக்கட்சியின் மாநில தலைவர் அப்துல் பாரி சித்திக்ஆகியோரும் உடன் சென்றனர்.
ஆளுநரை சந்தித்த பிறகு வெளியே வந்த லாலு கூறுகையில், எங்கள் கட்சியைச் சேர்ந்த 75 எம்.எல்.ஏ.க்கள்,காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 10 பேர், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 3 பேர், மார்க்சிஸ்டுகம்யூனிஸ்டைச் சேர்ந்த ஒருவர் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த 2 பேர் என மொத்தம் 90எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை ஆளுநரிடம் கொடுத்துள்ளோம்.
இந்திய கம்யூனிஸ்டைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களும் எங்களுக்கு ஆதரவு தருவதாக கூறியுள்ளனர். இதுவரைஎந்தக் கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோரவில்லை. அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள கட்சி என்பதால்ஆட்சியமைக்க உரிமை கோருகிறோம்.
எனவே எங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்று நாங்கள் ஆளுநரிடம் கூறினோம். ஆட்சியமைக்கஅழைத்தால் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்றும் ஆளுநரிடம் கூறினோம்.
இதற்கு முன்பு ராஜீவ் காந்தி, வி.பி.சிங், வாஜ்பாய் ஆகியோரை ஜனாதிபதி ஆட்சியமைக்க அழைத்தபோதுஅவர்களது கட்சிக்கு ஆட்சியமைக்கும் அளவிற்கு பெரும்பான்மை கிடையாது. ஆனாலும் அதிக இடங்களில்வென்ற கட்சி என்ற நியிைல் அந்தக் கட்சிகளை ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைத்தார்.
அதேபோல எங்களையும் ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும். நாளையுடன் பீகார் சட்டசபையின்ஆயுள்காலம் முடிவடைகிறது. எனவே ஜனாதிபதி ஆட்சி ஏற்படுவதை தவிர்க்கவே நாங்கள் ஆட்சியமைக்கஉரிமை கோரினோம் என்றார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications