ஜெவுக்கு பாதுகாப்பு: பெங்களூரில் அதிகாரிகள் ஆலோசனை
பெங்களூர்:
சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராவதற்காக முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் வந்தால், அவருக்கு கொடுக்கப்பட வேண்டிய பாதுகாப்புகுறித்து கர்நாடக மாநில காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்குவருகிற 14ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அன்றைய தினம் விசாரணையில் ஆஜராகுமாறு கூறி ஜெயலலிதா, சசிகலா, இளவரசி,டி.டி.வி.தினகரன், சுதாகரன் உள்ளிட்டோருக்கு தனி நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகளில் கர்நாடக காவல்துறை மற்றும் சட்டத்துறை அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.கருப்புப் பூனைப் படை பாதுகாப்புப் பிரிவில் ஜெயலலிதா இருப்பதால் அவருக்கு அதிகபட்ச பாதுகாப்பை அளிக்க கர்நாடககாவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
விமான நிலையத்திலிருந்து நீதிமன்றம் வரை ஜெயலலிதாவுக்குக் கொடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் ஆலோசனைநடத்தினர். எந்த வழியாக ஜெயலலிதாவை அழைத்து வருவது, போக்குவரத்து நெரிசலை எப்படிச் சமாளிப்பது என்பது உள்ளிட்டஅம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இதற்கிடையே, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள 14ம் தேதி ஜெயலலிதா பெங்களூர் வருவாரா என்பதில் சந்தகேம் எழுந்துள்ளது. காரணம்,தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் தற்போது நடந்து கொண்டுள்ளது. ஏப்ரல் மாதம் வரையிலும் கூட்டத் தொடர் நடைபெறும்.எனவே நீதிமன்ற உத்தரவுப்படி ஜெயலலிதா ஆஜராவாரா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனின் வழக்கறிஞர் சரவணக்குமார், பெங்களூர் தனி நீதிமன்றத்தை பார்வையிட்டுச்சென்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications