புதுவை: கண்ணன் ஆதரவு அமைச்சர் ராஜினாமா
பாண்டிச்சேரி:
புதுவையில் கண்ணன் ஆதரவு அமைச்சர் லட்சுமி நாராயணன் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
புதுவையில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய கண்ணன் கட்சியிலிருந்து நேற்று சஸ்பெண்ட்செய்யப்பட்டார். இதையடுத்து அவரது ஆதரவாளரான கல்வி அமைச்சர் லட்சுமி நாராயணன் தனது பதவியை ராஜினாமாசெய்யப் போவதாக அறிவித்தார்.
இந் நிலையில் இன்று காலை புதுவை துணை நிலை ஆளுநர் லகேராவை சந்தித்த அவர் தனது ராஜினாமா கடிதத்தைக்கொடுத்தார். பின்னர் அதன் நகலை பேக்ஸ் மூலம் முதல்வர் ரங்கசாமிக்கு அனுப்பி வைத்தார்.
இதற்கிடையே, என்னை கட்சியிலிருந்து நீக்கினாலும் கவலையில்லை, ரங்கசாமியை அகற்றும் வரை எனதுபோராட்டம் ஓயாது.இன்று திட்டமிட்டபடி கண்டனப் போராட்டத்தை நடத்தியே தீருவோம் என்று காங்கிரஸ் கட்சியிலிருந்து சஸ்பெண்ட்செய்யப்பட்டுள்ள புதுவை கண்ணன் கூறியுள்ளார்.
சஸ்பெண்ட் அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கூறுகையில்,என்னைக் கட்சியிலிருந்து நீக்கினாலும் ரங்கசாமிக்கு எதிராகப் போராடுவேன். அவரது ஆட்சி போக வேண்டும். வேறு ஒரு நல்லஅமைச்சரவை பதவியேற்க வேண்டும்.
அதுதான் புதுவைக்கும் நல்லது. எனவே என்னைக் கட்சியிலிருந்து நீக்கினால் எல்லாம் முடிந்து விடும் என்று தப்புக் கணக்குபோட்டுள்ளார்கள். அதுதான் நடக்காது. வேறு நல்ல அமைச்சரவை வரும்வரை நான் போராடுவேன்.
திட்டமிட்டபடி எனது தலைமையில் புதுவையில் கண்டனப் போராட்டம் நடைபெறும். ஊழல் பெருச்சாளியான ரங்கசாமி பதவிவிலகியே தீர வேண்டும், எங்களது புகார்களுக்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றார்.
புதுவை கண்ணன் தலைமையில் இன்று ரங்கசாமிக்கு எதிராக போராட்டம் நடக்கவுள்ளதால், வன்முறை ஏற்படாமல் தடுக்கும்பொருட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கண்ணன் ஆதரவாளர்கள் மீது கடலூரில் தடியடி
புதுவையில் கண்ணன் நடத்தும் பேரணியில் கலந்து கொள்வதற்காக காரைக்காலிலிருந்து 20 வேன்களில் சென்ற அவரதுஆதரவாளர்கள், போக்குவரத்து தடுப்புகளை உடைத்து விட்டு சென்றதால் போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி தடியடிநடத்தினர்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து தற்காலிமாக நீக்கப்பட்டுள்ள புதுவை கண்ணன், முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக இன்று மாலைபுதுவையில் பேரணி நடத்துகிறார். இதில் கலந்து கொள்வதற்காக புதுவை யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட காரைக்கால்நகரிலிருந்து 20 வேன்கள் முலம் கண்ணனின் ஆதரவாளர்கள் புதுவை புறப்பட்டனர்.
கடலூர் வந்த அவர்கள் அங்கு போக்குவரத்து சிக்னலைக் கண்டு கொள்ளாமல் விரைந்து சென்றனர். இதனால் போக்குவரத்துநெரிசல் ஏற்பட்டது. மேலும் சாலையின் நடுவே இருந்த போக்குவரத்துத் தடுப்புகளையும், போலீஸ் வாகனங்களையும்மோதிக்கொண்டு அவர்கள் சென்றுள்ளனர்.
இதையடுத்து போலீஸார் அனைத்து வேன்களையும் தடுத்தி நிறுத்தினர். சில தொண்டர்கள் மீது போலீஸார் தாக்குதல்நடத்தியதாகத் தெரிகிறது. இதையடுத்து வேன்களில் இருந்த நூற்றுக்கணக்கான தொண்டர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உடனடியாக போலீஸார் அவர்கள் மீது தடியடி நடத்திக் கலைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.பிரச்சினை ஏற்படாமல் இருக்க போலீஸார் அதிக அளவில் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications