சுனாமி: இலங்கைக்கு உதவும் தமிழக அதிகாரிகள்
சென்னை:
இலங்கையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளில் அந்நாட்டு அதிகாரிகளுக்கு பயிற்சிஅளிக்க, தமிழக ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் சாந்த ஷீலா நாயர், நாகை மாவட்ட ஆட்சித் தலைவர்ஜே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இலங்கை செல்கிறார்கள்.
சுனாமி தாக்குதலுக்கு தமிழகத்தை விட 2 மடங்கு அதிகமாகவே பாதிக்கப்பட்டது இலங்கை. அதிலும் தமிழர்கள்அதிகம் வசிக்கும் வட கிழக்குப் பகுதிகளில்தான் மிகப் பெரிய அளவில் உயிர்ச் சேதம் இருந்தது.
இலங்கையில் இன்னும் கூட நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடைபெறவில்லை. குறிப்பாக தமிழர்கள் பகுதிகளில்இலங்கை அரசு சரியான முறையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந் நிலையில் சுனாமி நிவாரணப் பணிகளில் இலங்கை அதிகாரிகளுக்கு பயிற்சி தருவதற்காக தமிழக ஊரகவளர்ச்சித் துறைச் செயலாளர் சாந்த ஷீலா நாயர்,நாகை மாவட்ட ஆட்சியர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை 2நாட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அந்நாடு, தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்தது.
இதை ஏற்ற முதல்வர் ஜெயலலிதா, இருவரையும் இலங்கை சென்று அந்நாட்டு அதிகாரிகளுக்கு பயிற்சிஅளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து இருவரும் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு செல்கிறார்கள்.
அங்கு 2 நாட்கள் தங்கியிருந்து நிவாரணப் பணிகளை எப்படி திறம்பட மேற்கொள்வது என்பது குறித்து அந்நாட்டுஅதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கிறார்கள்.
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிகளையும், தமிழக அரசின் நடவடிக்கைகள் குறித்தும் இலங்கைஅதிகாரிகளுக்கு தமிழக அதிகாரிகள் விளக்கவுள்ளனர்.
சர்வதேச அளவில் ஏராளமான பேர் இலங்கையில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில் திறமையானஅதிகாரிகளான சாந்த ஷீலா நாயர் மற்றும் ராதாகிருஷ்ணன் இருவரையும் இலங்கை அரசு அழைத்துள்ளதுதமிழகத்துக்குப் பெருமைசேர்ப்பதாக அமைந்துள்ளது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications