போலீஸ் தேர்வுக்கு வந்த பெண்கள் மயக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

போலீஸ் தேர்வுக்கு வந்த பெண்களில் சிலர் ஓட்டப் பந்தயத்தின்போது மயங்கி விழுந்தனர்.

தமிழகம் முழுவதும் 1997 போலீஸ் பணியிடங்களுக்கு ஆளெடுப்பு தொடங்கியுள்ளது. இதில் பெண் போலீஸாரின்எண்ணிக்கை 599 ஆகும். இதற்கு மொத்தம் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

முதல் கட்டமாக கடந்த மாதம் 21ம் தேதி ஆண் காவலர்கள் தேர்வு நடந்தது. இன்று பெண் போலீஸாருக்கானதேர்வு தொடங்கியது. சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடந்த தேர்வில் 108 பெண்கள் கலந்துகொண்டனர்.

இதில் 400 மீட்டர் தூர ஓட்டப் பந்தயத்தில் 5க்கும் மேற்பட்ட பெண்கள் ஓட முடியாமல் மயங்கி விழுந்தனர்.அவர்களுக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது.

பின்னர் உயர வாரியாக பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களின் படிப்புச் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன.

ஏராளமான பெண்கள் தங்களது கைக் குழந்தைகளுடன் தேர்வுக்கு வந்திருந்தனர். குழந்தைகளைகுடும்பத்தினரிடம் கொடுத்து விட்டு அவர்கள் தேர்வில் கலந்து கொண்டனர். இன்று தேர்வானவர்களுக்கு நாளைஇரண்டாவது கட்டத் தேர்வு நடக்கிறது. அதில் தேறுபவர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+