பிகார்: ஜனாதிபதி ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை
பாட்னா:
பிகாரில் குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு அம் மாநில ஆளுநர் பூட்டா சிங் பரிந்துரை செய்துள்ளார்.
பிகாரில் மொத்தமுள்ள 243 இடங்களில் 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சியமைக்கமுடியும். லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு அதிக பட்சமாக 90 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகக்கூறப்படுகிறது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தங்களுக்கு 92 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாககூறுகிறது. ராம் விலாஸ் பாஸ்வானோ இவ்விரு கூட்டணிகளையும் ஆதரிக்கப் போவதில்லை என்று கூறிவிட்டார்.
இந்நிலையில், ராப்ரி தேவி தலைமையில் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர்கள் நேற்று ஆளுநர் பூட்டாசிங்கைசந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்ற நிலையில் தங்களைஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்று அவர்கள் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் இன்று பிகாரில் குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பூட்டாசிங் பரிந்துரைத்துள்ளார். இந்ததகவலை ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக இன்று காலை ராம்விலாஸ் பாஸ்வானை ஆளுநர் பூட்டாசிங் அழைத்து பேசினார். அப்போது அவர்,ராஷ்டிரிய ஜனதாதளத்திற்கும், பாஜக கூட்டணிக்கும் ஆதரவளிக்க முடியாது என்பதை திட்டவட்டமாககூறிவிட்டார்.
இதனால் வேறு வழியில்லாததால் குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பூட்டசிங் பரிந்துரைத்துள்ளார்.
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications