முஷாரப்புக்கு குஜராத் கிரிக்கெட் சங்கம் அழைப்பு
அகமதாபாத்:
ஏப்ரல் 12-ந் தேதி அகமதாபாத்தில் நடைபெறவுள்ள இந்தியா- பாகிஸ்தான் மோதும் ஒரு நாள் போட்டியை காணவரும்படி பாகிஸ்தான்அதிபர் முஷாரப்புக்கு குஜராத் கிரிக்கெட் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் மோதும் முதல் டெஸ்ட் போட்டி 8-ந் தேதி மொகாலியில் தொடங்குகிறது. இது தவிர மேலும் 2 டெஸ்ட்போட்டிகளும், 6 ஒரு நாள் போட்டிகளும் நடைபெறுகின்றன. இந் நிலையில் தீவிர கிரிக்கெட் ரசிகரான பாகிஸ்தான் அதிபர் முஷாரப்புக்குஇந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை பார்க்கும் ஆவல் ஏற்பட்டது.
முறைப்படி இந்தியா அழைத்தால் போட்டியைக்காண வரத்தயார் என்று முஷாரப் சமீபத்தில் கூறினார். இதையடுத்து அகமதாபாத்தில்ஏப்ரல் 12-ந் தேதி நடைபெறும் ஒரு நாள் போட்டியைக் காணவரும்படி குஜராத் கிரிக்கெட் சங்கம் முஷாரப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக அதன் தலைவர் நரஹரி அமின் கூறுகையில், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டியைக்காண பாகிஸ்தான்அதிபர் முஷாரப் விரும்பியதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
ஆனால் அவருக்கு தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுக்க வேண்டியதில்லை. அவ்வாறு அனுப்ப வேண்டுமென்றால் மத்திய அரசும்,இந்திய கிரிக்கெட் வாரியமும் தான் முடிவு செய்யவேண்டும்.
குஜராத்தில் நடைபெறும் போட்டிக்காக ஆளுநர், மாநில முதல்வர், ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உட்பட பலருக்கும் அழைப்புஅனுப்புவது வழக்கம். அவ்வாறு பாகிஸ்தான் அதிபரையும் வரவேற்க நாங்கள் தயாராக உள்ளோம் என்றார்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications