ஜார்க்கண்ட்: மார்ச் 15ல் நம்பிக்கை வாக்கெடுப்பு
ராஞ்சி:
ஜார்கண்டில் புதிய சட்டசபையின் முதல் கூட்டம் வரும் 10-ந்தேதி தொடங்குகிறது. 15-ந்தேதி முதல்வர் சிபு சோரன்அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
ஜார்கண்ட் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மைகிடைக்கவில்லை. இந்நிலையில் தங்களுக்கு 41 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகவும், தங்களைஆட்சியமைக்க அழைக்கவேண்டும் எனவும் பாஜக கோரிக்கை விடுத்தது.
ஆனால் பாஜகவை அழைக்காமல் காங்கிரஸை ஆட்சியமைக்க அழைத்த ஆளுநர் சையது ராஸி, 30-ந்தேதிபெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றார். இதையடுத்து சிபு சோரன் முதல்வராக பொறுப்பேற்றார்.
இதைக்கண்டித்து பாஜக பாராளுமன்றத்தில் கடும் ரகளையில் ஈடுபட்டது. குடியரசுத்தலைவர் அப்துல் கலாமிடமும்புகார் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து ஆளுநர் சையது ராஸியை கலாம் டெல்லிக்கு வரவழைத்து பேசினார்.
இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான தேதியை ஆளுநர் 15-ந் தேதிக்கு மாற்றினார்.
இந்நிலையில் புதிய சட்டசபையின் முதல் கூட்டம் 10-ந் தேதி தொடங்கும் என்று கூறப்படுகிறது. அன்றே தற்காலிகசபாநாயகர் நியமிக்ப்படுவார். அவர் புதிய உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.
புதிய சபாநாயகர் 12-ந் தேதி தேர்வு செய்யப்படுவார். இதன் பிறகு 2 நாட்கள் விடுமுறை நாட்களாகும். இதற்குஅடுத்த நாள் 15-ந் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும்.
-
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications