பெங்களூர் சாப்ட்வேர் நிறுவனங்களை தாக்க பாக் தீவிரவாதிகள் திட்டம்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

பெங்களூரிலுள்ள சாப்ட்வேர் நிறுவனங்கள் மீது லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்ததிட்டமிட்டிருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இங்குள்ள ஒரு ரெயில் நிலையத்தில்ஏராளமான துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன் தினம் வடமேற்கு டெல்லியிலுள்ள சூரஜ் விஹார் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த 2 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பதும், டேராடூன் பகுதியிலுள்ளஇந்திய ராணுவ பயிற்சி மையம் மற்றும் பெங்களூரிலுள்ள சாப்ட்வேர் நிறுவனங்களை தகர்க்க திட்டமிட்டிருப்பதும்தெரியவந்தது.

மேலும் 3 தீவிரவாதிகள் சூரஜ் விஹாரிலுள்ள ஒருவீட்டில் பதுங்கியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து போலீஸார் அந்த வீட்டை சுற்றி வளைத்து தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர்.

இதில் 3 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். இவர்களில் 2 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். ஒருவர்பாட்னாவைச் சேர்ந்தவர். இவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்களும், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன.

பெங்களூரிலுள்ள சாப்ட்வேர் நிறுவனங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவெளியான தகவலை முதலில் பெங்களூர் போலீஸார் மறுத்தனர். ஆனால் நேற்று இங்குள்ள கன்டோண்மென்ட்ரெயில் நிலையத்தில் ஏராளமான துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டிருப்பது பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பெங்களூர் நகர போலீஸ் கமிஷனர் மாரிசாமி இன்று நிருபர்களிடம் கூறுகையில், நேற்று இரவுகன்டோண்மென்ட் ரெயில் நிலையத்தில் போலீஸார் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ரெயில் நிலைய வாசலில் சந்தேகத்திற்கிடமான முறையில் 2 பைகள் கிடந்தன. அவற்றில் 3 நாட்டுத்துப்பாக்கிகள், 5 வாள்கள், 9 மி.மீ. எந்திர துப்பாக்கி மற்றும் 149 துப்பாக்கி குண்டுகள் ஆகியவை இருந்தன.

சென்னை-பெங்களூர் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் வந்து சென்ற சிறிது நேரத்தில் இவை கண்டுபிடிக்கப்பட்டன.எனவே இவை சென்னையிலிருந்து தான் கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும்.

இதைக் கொண்டு வந்த ஆசாமிகள், போலீஸாரைக் கண்டதும் அவற்றை பிறகு எடுத்துக் கொள்ளலாம் என்று கருதிரெயில் நிலைய வாசலிலேயே விட்டுச் சென்றிருக்கலாம்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பெங்களூரில் பாதுகாப்பை அதிகரித்துள்ளோம். மேலும் மத்திய அரசுஅலுவலகங்கள், சாப்ட்வேர் நிறுவனங்கள் மற்றும் முக்கிய அலுவலகங்களுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் துப்பாக்கிகளை முதல்வர் தரம்சிங் பார்வையிட்டார். இவற்றை விட்டுச்சென்றவர்கள் குறித்து நாங்கள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

இதற்கிடையே ரெயில்வே போலீஸ் கூடுதல் டி.ஜி.பி.மூர்த்தி இன்று நிருபர்களிடம் கூறுகையில், ஆயுதங்களைகொண்டுவந்தவர்கள் அவற்றை துணியில் சுற்றி கொண்டு வந்துள்ளனர். கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் மற்றும்வெடிபொருட்களை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம்.

கடந்த 3 நாட்களுக்கு முன் ஒருவரிடமிருந்து 3 துப்பாக்கிகளை ரெயில்வே போலீஸார் கைப்பற்றினர்.கோவாவிலிருந்து ஜார்கண்ட் செல்லும் வழியில் இவை பறிமுதல் செய்யப்பட்டன.

அடுத்தடுத்து இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதால் அனைத்து ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்புஅதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.

இதற்கிடையே முதல்வர் தரம்சிங் இன்று நிருபர்களிடம் கூறுகையில், துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள்கைப்பற்றப்பட்டது குறித்து உள்துறை அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி விவாதிக்க உள்ளதாக தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+